உங்கள் குழந்தை டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுகிறதா? எச்சரிக்கும் மருத்துவர்

Feeding Kids the Right Way : இப்போதெல்லாம் குழந்தைகள் டிவி அல்லது ஸ்மார்ட்போன் இல்லாமல் சாப்பிடுவது இல்லை. நாளடைவில் அதற்கு மிகவும் அடிமையாகின்றனர். இந்தப் பழக்கம் அவர்களுக்கு எதிர்காலத்தில் உடல் மற்றும் மன ரீதியாக தாக்கத்தை ஏற்படத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பதிவில் இதற்கான தீர்வு என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

உங்கள் குழந்தை டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுகிறதா? எச்சரிக்கும் மருத்துவர்

மாதிரி புகைப்படம்

Updated On: 

08 Aug 2025 22:58 PM

இப்போதெல்லாம் டிவி அல்லது ஸ்மார்ட்போன் (Smartphone) இருந்தால் தான் குழந்தைகள் சாப்பிடவே செய்கின்றனர். பெற்றோர்களும் குழந்தை சாப்பிட்டால் போதும் என அவர்களை டிவியில் கார்டூன் (Cartoon) பார்த்தபடி சாப்பிட அனுமதிக்கிறோம். ஒரு கட்டத்தில் குழந்தைகள் அதற்கு அடிமையாகிறார்கள். இந்த பழக்கம் தொடரும்போது பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, பெற்றோர்களுடனான உறவிலும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே குழந்தைகளை முடிந்த வரை செல்போன், டிவிக்கு அடிமையாகாமல் பார்த்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

குழந்தைகள் அழாமல் பார்த்துக்கொள்வதற்காக பெற்றோரே அவர்கள் கையில் ஸ்மார்ட்போனை குடுக்கின்றனர். அவர்கள் ஸ்மார்ட்போனில் கேம் விளையாடுவது, கார்டூன் பார்ப்பது என பொழுதை கழிக்கின்றனர். நீண்ட நேரம் அமர்ந்த நிலையில் ஸ்மார்ட்போன் பார்ப்பதால் அவர்களது உடல் நல் பாதிக்கிறது.  இந்த நிலையில் இது மிகவும் தவறான பழக்கம் என மருத்துவர் காருண்யா எச்சரிக்கிறார். மேலும் இந்தப் பழக்கம் குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதையும் படிக்க : நோய்கள் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ விரும்புகிறீர்களா? இந்த ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.

டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

  • திரையைப் பார்த்துக்கொண்டே சாப்பிடும்போது, குழந்தைகள் எவ்வளவு சாப்பிடுகிறார்கள் என்பது தெரியாது. இது அதிகமாக சாப்பிடுவதற்கு அல்லது சரியாக சாப்பிடாமல் இருப்பதற்கு வழிவகுக்கிறது. இது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதிக எடை போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
  • திரையைப் பொறுத்து சாப்பிடுவதன் மூலம் குழந்தைகள் தாங்களாகவே சாப்பிட கற்றுக்கொள்ள முடியாது. இது அவர்களின் சுதந்திரத்தைக் குறைக்கிறது.
  • கவனம் இல்லாமல் சாப்பிடுவதால் குழந்தைகள் உணவை சரியாக மென்று சாப்பிடுவதில்லை. இது செரிமானத்தை மெதுவாக்குகிறது.
  • உணவு நேரம் என்பது அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஒன்றாக மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிடும் நேரம். டிவி மற்றும் தொலைபேசி காரணமாக அந்த நேரம் வீணாகிறது.

இதையும் படிக்க : ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மனநலம் பாதிக்குமா? ஆய்வு எச்சரிக்கை!

இதற்கு என்ன தீர்வு?

  • குழந்தைகளை செல்போன் அல்லது டிவி இல்லாமல் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். வீட்டில் சாப்பிடும்போது டிவி மற்றும் செல்போன் கூடாது  விதியை உருவாக்குங்கள்.
  • முழு குடும்பமும் ஒன்றாக அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிடுங்கள்.  உணவைப் பற்றி பேசுங்கள். உணவின்  சுவைகள் மற்றும் வாசனைகள் பற்றி குழந்தைகளிடம் பேசுங்கள்.
  • டிவிக்கு பதிலாக கதைகளைச் சொல்லி பாடல்களைப் பாடுவதைப் பழக்கப்படுத்துங்கள்.

இந்த சிறிய மாற்றங்கள் குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும். டாக்டர் காருண்யா வழங்கிய இந்த குறிப்புகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் மனதிலும் மிகவும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.