Winter Hair Care: குளிர்காலத்தில் தலைக்கு எத்தனை நாட்கள் ஷாம்பூ போடலாம்..? இது முடிக்கு ஆரோக்கியமானதா?

Hair Fall: குளிர்காலத்தில் உங்கள் தலைமுடியை அலச லேசான மற்றும் ஈரப்பதமூட்டும் ஷாம்பூகளை பயன்படுத்துங்கள்.  நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூகளில் சல்பேட்டுகள் போன்ற எந்த ரசாயனங்களும் இருக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் இவை முடியின் இயற்கையான ஈரப்பதத்தை சேதப்படுத்தும். இதற்கு பதிலாக தேன், தேங்காய் எண்ணெய் மற்றும் வெந்தயம் போன்ற இயற்கை பொருட்கள் கொண்ட ஷாம்பூகள் கூந்தலுக்கு நல்லது.

Winter Hair Care: குளிர்காலத்தில் தலைக்கு எத்தனை நாட்கள் ஷாம்பூ போடலாம்..? இது முடிக்கு ஆரோக்கியமானதா?

தலைமுடி ஆரோக்கியம்

Published: 

18 Dec 2025 16:00 PM

 IST

குளிர்காலத்தில் (Winter) தலைக்கு குளிக்கும்போது, உச்சந்தலையை பராமரிப்பது மிக மிக முக்கியம். குளிர்காலத்தில் உங்கள் தலைமுடியை அலசும்போது, உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது கிடையாது. குளிர்ந்த காலநிலையில், உங்கள் தலைமுடி இயற்கையான எண்ணெய்களையும் ஈரப்பதத்தையும் தக்க வைத்துக் கொள்கிறது. இதனால் அது குறைவாக வறண்டு போகிறது. இந்த குளிர்ந்த பருவ காலத்தில் நீங்கள் தலைக்கு அதிகமாக குளிக்க வேண்டிய அவசியமில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதன்படி, குளிர்காலத்தில் வாரத்திற்கு 2-3 முறை உங்களது தலைமுடியை அலசுவது போதுமானது. நீங்கள் குளிர்காலத்தில் அதிகமாக தலைமுடியை அலசும்போதும் முடியை பலவீனப்படுத்தும். அதன்படி, குளிர்காலத்தில் தலை முடியை (Hair Fall) எப்படி பராமரிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: பொடுகு தொல்லையா..? எண்ணெய் தேய்த்தும் பலன் இல்லையா? சில டிப்ஸ் இதோ!

எண்ணெய் மசாஜ்:

  • குளிர்காலத்தில் தலைமுடியை அலசுவதற்கு முன் எண்ணெயை கொதிக்க வைத்து, அதை முடிக்கு அப்ளை செய்து மசாஜ் செய்யவும்.
  • உங்களுக்கு எண்ணெய் பசையுள்ள கூந்தல் இருந்தால், வாரத்திற்கு 3 முறை எண்ணெயை தேய்த்து உங்கள் தலைமுடியை அலசி கொள்ளலாம்.
  • உங்களுக்கு வறண்ட கூந்தல் இருந்தால், வாரத்திற்கு 2 முறை எண்ணெய் மசாக் செய்து, நீங்கள் தலைக்கு குளிப்பது நல்லது. இதனால் கூந்தல் அதிகம் உடையவும் உடையாது, மேலும், கூந்தல் நீண்ட நேரம் பளபளப்பாகவும் இருக்கும்.

ஷாம்பூ பயன்படுத்துதல்:

குளிர்காலத்தில் உங்கள் தலைமுடியை அலச லேசான மற்றும் ஈரப்பதமூட்டும் ஷாம்பூகளை பயன்படுத்துங்கள்.  நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூகளில் சல்பேட்டுகள் போன்ற எந்த ரசாயனங்களும் இருக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் இவை முடியின் இயற்கையான ஈரப்பதத்தை சேதப்படுத்தும். இதற்கு பதிலாக தேன், தேங்காய் எண்ணெய் மற்றும் வெந்தயம் போன்ற இயற்கை பொருட்கள் கொண்ட ஷாம்பூகள் கூந்தலுக்கு நல்லது. இவற்றால் முடியில் எந்த எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்தாது.

ALSO READ: குளிர்காலத்தில் சூடான குளியலா..? இது தலை முடி உதிர்தலை ஏற்படுத்தும்!

கண்டிஷனர்:

ஷாம்பூ போட்ட பிறகு கண்டிஷனரைப் பயன்படுத்துவதும் மிகவும் முக்கியம். இது முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கும். கழுவிய பின் துண்டு போன்றவற்றால் உங்கள் தலைமுடியை உலர வைக்காதீர்கள். இது உங்கள் தலையில் அழுத்தத்தை ஏற்படுத்தி நாளடைவில் முடி உதிர்தல் பிரச்சனையை ஏற்படுத்தும். துண்டுக்கு பதிலாக உங்கள் தலைமுடியில் ஹேர் ட்ரையரை குறைவாகப் பயன்படுத்துங்கள். ஏனெனில் இது உங்கள் தலைமுடியை இன்னும் உலர்த்தும். மேலும், இது தலை முடி உதிர்தல் பிரச்சனையை தடுக்கும்.

உடல் எடையை குறைக்க டயட் இருக்கீங்களா? எச்சரிக்கை உயிருக்கே ஆபத்தாக முடியலாம்
காற்று மாசு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்.. ஷாக் ரிப்போர்ட்!
திடீரென ரத்தான திருமணம்.. மணமகள் சொன்ன காரணத்தால், உடைந்து போன மணமகன்..
இமயமலையில் கண்டெடுக்கப்பட்ட அணு ஆயுதம்.. பின்னணி என்ன?