Diwali Burn First Aid: தீபாவளி நாளில் தீக்காயம் ஏற்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும்..? எதை செய்யவே கூடாது?

Diwali Burn First Aid and Care: தீக்காயத்திற்கு பல் துலக்கும் பேஸ்ட்டை பயன்படுத்துவது மிகவும் தீங்கு விளைவிக்கும். அவ்வாறு செய்வது தொற்றுநோயை ஏற்படுத்தும். ஏனெனில் ல் துலக்கும் பேஸ்ட்டில் தோலுடன் வினைபுரியும் பல்வேறு இரசாயனங்கள் உள்ளன. இது காயத்தை மோசமாக்கும்.

Diwali Burn First Aid: தீபாவளி நாளில் தீக்காயம் ஏற்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும்..? எதை செய்யவே கூடாது?

தீபாவளி தீக்காயம்

Published: 

06 Oct 2025 19:23 PM

 IST

தீபாவளி பண்டிகை (Diwali) நாடு முழுவதும் கொண்டாடப்படும் மகிழ்ச்சியான பண்டிகையாகும். இந்த பண்டிகை குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி மற்றும் ஒளியை தருவதாக நம்பப்படுகிறது. தீபாவளியன்று, மக்கள் தங்கள் வீடுகளை விளக்கேற்றி அலங்கரிக்கின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இப்படியான சூழ்நிலையில் பட்டாசு வெடிக்கும் போது சிலருக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்படுகின்றன. இந்த காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் மருத்துவர்களை நாடாமல், வீட்டிலேயே வீட்டு வைத்தியங்களை மேற்கொள்கிறார்கள். இதனால், முதலுதவி (First Aid) சரியாக வழங்கப்படாமல், காயத்தின் தீவிரத்தை அதிகரிக்கும். முதலுதவி சரியாக வழங்கப்பட்டால் மட்டுமே காயத்தை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும் மற்றும் சிக்கல்களைத் தவிர்க்கலாம். தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் போது யாராவது தீக்காயமடைந்தால் என்ன உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், தீக்காயத்தை எவ்வாறு சுத்தம் செய்வது, என்ன கிரீம் தடவ வேண்டும் என்பதை விவரமாக தெரிந்து கொள்வோம்.

எப்படியான முதலுதவி அளிக்கலாம்..?

யாராவது பட்டாசு அல்லது தீயினால் தீக்காயம் அடைந்தால், முதலில் செய்ய வேண்டியது தீக்காயத்தை நன்கு கழுவுவதாகும். தீக்காயம் ஏற்பட்ட 5-10 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் கழுவுவது மிக முக்கியம். இது காயம் மேலும் மோசமடைவதைத் தடுத்து, தோலை சுத்தம் செய்ய உதவுகிறது. பின்னர், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் கிருமி நாசினி கிரீம் அல்லது தீக்காய கிரீம் பயன்படுத்தவும். அந்த பகுதியை சுத்தமான துணியில் சுற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும். இந்த வகையான முதலுதவி குறிப்பிடத்தக்க பலனை அளிக்கும். பலரும் தீக்காயத்திற்கு உடனடியாக வீட்டில் எளிதாக கிடைக்கும் பல் துலக்கும் பேஸ்ட் அல்லது மஞ்சளை பயன்படுத்துகிறார்கள். இதை ஒருபோதும் தீக்காயங்களில் தடவக்கூடாது.

பல் துலக்கும் பேஸ்ட் மற்றும் மஞ்சள் தடவுவது ஆபத்தானது:

தீக்காயத்திற்கு பல் துலக்கும் பேஸ்ட்டை பயன்படுத்துவது மிகவும் தீங்கு விளைவிக்கும். அவ்வாறு செய்வது தொற்றுநோயை ஏற்படுத்தும். ஏனெனில் ல் துலக்கும் பேஸ்ட்டில் தோலுடன் வினைபுரியும் பல்வேறு இரசாயனங்கள் உள்ளன. இது காயத்தை மோசமாக்கும். மேலும், தீக்காயத்தில் மஞ்சளைப் பயன்படுத்துவது தீக்காயத்தை மறைத்து அழுக்குகளை குவித்து, தொற்று அபாயத்தை அதிகரிக்கும். எனவே, தீக்காயத்திற்குப் பிறகு பற்பசை, மஞ்சள் அல்லது பிற பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது. தீக்காயம் பெரியதாக இருந்தால், உடனடி சிகிச்சை அவசியம். இதுபோன்ற நேரங்களில், அந்த நபரின் ஆடையை அகற்றி, அந்த பகுதி காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவும். பின்னர், அந்த பகுதியை நன்கு கழுவி, சுத்தமான துணியால் சுற்ற வேண்டும். பின்னர், தீக்காயம் பட்ட இடத்தை மருத்துவமனையில் சென்று காமிக்கவும்.

ALSO READ: தீபாவளி நாளில் சிறுவர்களுக்கு காயம் ஏற்படும் பயமா? இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை முக்கியம்!

தீபாவளியன்று தீக்காயங்களைத் தவிர்ப்பது எப்படி?

தீபாவளியின் போது சரியான ஆடைகளை அணிவது தீக்காயங்களைத் தடுக்க உதவும். மக்கள் நன்கு பொருந்தக்கூடிய ஆடைகளை அணியவும், மிகவும் தளர்வான ஆடைகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தளர்வான ஆடைகள் சில நேரங்களில் விளக்கு அல்லது மெழுகுவர்த்திகளிலிருந்து தீப்பிடித்து, தீக்காயங்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் இதுபோன்ற விபத்துகளை பெருமளவில் தவிர்க்கலாம். தீபாவளியின் போது பாதுகாப்பைப் பராமரிப்பது உங்கள் சொந்த பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, மற்றவர்களின் பாதுகாப்பிற்கும் அவசியம். தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும்போது சிறியவர்கள் மற்றும் முதியவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.