Rented House: வாடகை வீட்டில் வசிக்கிறீர்களா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

Legal Rights for Tenants: இந்தியாவில் வீட்டை வாடகைக்கு விடுபவர்களை போல், வாடகைக்கு எடுப்பவர்களுக்கும் கூட சில சட்ட உரிமைகள் உள்ளன. இந்த விஷயங்கள் தெரியாமல் பலர் அவதிப்படுகிறார்கள். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

Rented House: வாடகை வீட்டில் வசிக்கிறீர்களா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

வாடகை வீடு

Published: 

17 Sep 2025 19:56 PM

 IST

நீங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால் வாடகைக்கு வசிப்பவர்கள் (Rented House) தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளது. வீட்டின் உரிமையாளர் என்ற பெயரில் பலரும் தங்களது வீட்டில் வசிக்கும் குடும்பத்தினரை பல்வேறு வகைகளில் தொந்தரவு செய்கிறார்கள். இதனால், பலரும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் தொந்தரவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உண்டாகிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், வேறு காரணங்களுக்காகவும் வீட்டின் உரிமையாளர்கள் (House Owners) பிரச்சனையை ஏற்படுத்துகிறார்கள். இந்தநிலையில், இந்தியாவில் வீட்டை வாடகைக்கு எடுப்பவர்களுக்கும் கூட சில சட்ட உரிமைகள் உள்ளன. இந்த விஷயங்கள் தெரியாமல் பலர் அவதிப்படுகிறார்கள். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

வீட்டிற்குள் வர அனுமதி தேவை

உங்களுக்கு வீடு அல்லது ஒரு குறிப்பிட்ட அறையை வாடகைக்கு கொடுப்பவர்கள் உங்களது அனுமதியின்றி உங்கள் வீட்டிற்குள் நுழையக்கூடாது. அது அவர்களின் சொந்த வீடாக இருந்தாலும் சரி. உங்களிடம் முறையான அனுமதியின்றி அல்லது உங்களிடம் சொல்லாமல் அவர்கள் உங்கள் வீட்டிற்குள் நுழையக்கூடாது. இது சட்டவிரோத செயல் என்று அழைக்கப்படுகிறது.

ALSO READ: சட்டையில் இடது பக்கம் மட்டும் ஏன் பாக்கெட் இருக்கிறது? உண்மை என்ன?

ஒப்பந்தம்

நீங்கள் ஒரு வீட்டில் 11 மாதங்களுக்கும் மேலாக வாடகை வீட்டில் வசித்து வந்தால், நீங்கள் நிச்சயமாக வாடகை ஒப்பந்தத்தை (ரெண்டல் அக்ரிமெண்ட்) பெற வேண்டும். ஒப்பந்தம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட பத்திரமாக இருக்க வேண்டியது அவசியம். வீட்டின் உரிமையாளர் உங்களிடம் ஒப்பந்தத்தை கையால் எழுதியோ அல்லது சாதாரண காகிதத்தில் டைப் செய்து கொடுத்திருந்தாலோ, ஏதேனும் பிரச்சனை காரணமாக நீங்கள் நீதிமன்றம் சென்றால் அது செல்லுபடியாகாது.

உடனடியாக வெளியேற்ற அனுமதி இல்லை

உங்கள் வீட்டு உரிமையாளருக்கு உங்களை ஒரே இரவில் வெளியேற்ற உரிமை இல்லை. உங்களை வெளியேற்றுவதற்கு ஒரு சட்டப்பூர்வ செயல்முறை இருக்க வேண்டும். வீட்டு உரிமையாளருடன் உங்களுக்கு தகராறு ஏற்பட்டிருந்தாலோ அல்லது வாடகை செலுத்துவதில் தாமதமாகிவிட்டாலோ, வீட்டு உரிமையாளருக்கு உங்களை திடீரென வெளியேற்றுவதற்கு உரிமை இல்லை. இந்திய சட்டத்தின் கீழ் வாடகைத்தாரர் பாதுகாப்பு படி, வாடகைத்தாரரை வெளியேற்ற சொல்வதற்குமுன், முறையான முன்னறிப்பை வழங்க வேண்டும். உடனடியாக உங்களது வீட்டின் உரிமையாளர் உங்களை வெளியேற சொன்னால், நீங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தை நாடி, குறிப்பிட்ட நாட்களை கோரலாம்.

வாடகை ரசீதுகள்:


வீட்டு உரிமையாளர்கள் மாதந்தோறும் நீங்கள் கொடுக்கும் வாடகைக்கு ரசீதுகளை வழங்க வேண்டும். இது உங்கள் உரிமை. பின்நாளில் வாடகை தொடர்பான ஏதேனும் பிரச்சனை எழுந்தால், இது உங்களுக்கு சட்டப் பாதுகாப்பை தரும்.

ALSO READ: தேவையில்லாமல் அதிகம் சிந்திக்கும் இந்தியர்கள்… ஆய்வு சொன்ன அதிர்ச்சி!

இது தவிர, கட்டிட பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புகளுக்கு உரிமையாளர் உங்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது. இது உங்கள் ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். மேலும், வாடகைக் கட்டுப்பாட்டுப் பாதுகாப்புச் சட்டங்களின்படி, சில மாநிலங்களில், உரிமையாளர் தனது விருப்பப்படி வாடகை உயர்வை அதிகரிக்கக்கூடாது.