முத்தம் கொடுக்க வந்த கள்ளக்காதலனின் உதட்டை கடித்து துப்பிய காதலி.. ஷாக் சம்பவம்!
Woman Bites Lovers Lips In UP | உத்த பிரதேசத்தில் ஏற்கனவே திருமணமான ஒரு ஆணுடன் ஒரு பெண் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்துள்ளார். இதன் காரணமாக அவர் அந்த நபருடனான உறவை துண்டிக்க முயற்சி செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர்
லக்னோ, நவம்பர் 19 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், கான்பூரில் (Kanpur) உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான சாம்பி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். ஆனால், அவருக்கு அதே கிராமத்தை சேர்ந்த வேறு ஒரு இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் கள்ளக்காதல் ஜோடிகளாக வாழ்ந்து வந்துள்ளனர்.
கள்ளக்காதலை முறித்துக்கொள்ள கூறிய பெண்
இருவரும் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நிலையில், அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதனால் கள்ளக்காதலை முறித்துக்கொள்ளும்படி அந்த பெண் கூறியுள்ளார். அதனை ஏற்க மறுத்த சாம்பி தொடர்ந்து தன்னுடன் இருக்க வேண்டும் என அந்த பெண்ணை வலியுறுத்தியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு – உமர் நபியின் முக்கிய உதவியாளர் கைது…. வெளியான புகைப்படம்
கள்ளக்காதலனின் உதட்டை கடித்து துப்பிய இளம் பெண்
கள்ளக்காதல் ஜோடிக்கு இடையே சிக்கல் ஏற்பட்ட நிலையில், அந்த இளம் பெண் நேற்று (நவம்பர் 18, 2025) மதியம் ஊரில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளார். அவரை சாம்பி பின் தொடர்ந்து சென்றுள்ளார். அதுமட்டுமன்றி, அந்த இளம் பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து பாலியல் அத்துமீறலிலும் அவர் ஈடுபட்டுள்ளார். இதனால், அந்த இளம் பெண் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
இதையும் படிங்க : VIDEO: கத்தியுடன் இருவரை ஓட ஓட விரட்டி குத்த முயற்சி.. விமான நிலையத்தில் பரபரப்பு
கள்ளக்காதலை முறித்துக்கொள்ளும்படி கூறியும் சாம்பி தன்னை பின் தொடர்ந்து வந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில், ஆத்திரமடைந்த அந்த பெண் தனது கள்ளக்காதலனின் உதட்டை கடித்து துப்பியுள்ளார். இதனால் சாம்பி வலியால் அலறி துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முத்தம் கொடுக்க வந்த கள்ளக்காதலனின் உதட்டை இளம் பெண் கடித்து துப்பிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.