உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து.. 7 பேர் உயிரிழப்பு… அதிர்ச்சி சம்பவம்!

Uttarakhand Helicopter Crash : உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து கேதார்நாத் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து.. 7 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி சம்பவம்!

ஹெலிகாப்டர் விபத்து

Updated On: 

15 Jun 2025 12:03 PM

உத்தரகாண்ட், ஜூன் 15 : உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது (Uttarakhand Helicopter Crash) அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டேராடூனில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து அதிகாலை 5.30 மணியளவில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, 2025 ஜூன் 15ஆம் தேதியான இன்று காலை டேராடூனில் இருந்து கேதார்நாத்துனுக்கு பக்தர்கள் 7 பேர் ஹெலிகாப்டரில் சென்றுக் கொண்டிருந்ததனர். புறப்பட்ட 10 மணி நிமிடங்களிலேயே ஹெலிகாப்டர் கௌரிகுண்ட் மற்றும் சோன்பிரயாக் இடையே விழுந்து நொறுங்கியது.

உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து

முன்னதாக, ஹெலிகாப்டர்  திரிஜுகிநாராயண் மற்றும் கௌரிகுண்ட் இடையே  காணாமல் போனதாக அதிகாரிகள் கூறினர். அதன்பிறகு, ஹெலிகாப்டர் கௌரிகுண்ட் மற்றும் சோன்பிரயாக் இடையே விழுந்து நொறுங்கியது.

விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை அடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. இருப்பினும், மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது, இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்கள் மீட்கப்பட்டு வருகின்றன. ஹெலிகாப்டர் தனியாரான ஆர்யன் கம்பெனியைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது.

7 பேர் பலி

மாநில முதல்வர் ட்வீட்


இந்த விபத்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ருத்ரபிரயாக் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புக் குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.

2025 ஜூன் 12ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே   கட்டுப்பாட்டை இழந்து விழுந்துள்ளது. அங்கு இருந்த மருத்துவ கல்லூரி விடுதியின் மீது விழுந்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்து 241 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.