UP Dowry Harassment: வரதட்சணை கொடுமையின் உச்சம்..! மருமகள் இருட்டு அறையில் லாக்! பாம்பை விட்டு மாமியார் செய்த கொடூரம்..!

Kanpur Dowry Harassment: உத்தரபிரதேசத்தை அடுத்த கான்பூரில் வரதட்சணைக்காக மாமியார் தனது மருமகளை பாம்பை விட்டு கொலை செய்யும் அளவிற்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கான்பூர் போலீசார் மாமியார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

UP Dowry Harassment: வரதட்சணை கொடுமையின் உச்சம்..! மருமகள் இருட்டு அறையில் லாக்! பாம்பை விட்டு மாமியார் செய்த கொடூரம்..!

வரதட்சணை கொடுமை

Published: 

22 Sep 2025 21:31 PM

 IST

கான்பூர், செப்டம்பர் 22: தமிழ்நாடு (Tamil Nadu) மட்டுமின்றி இந்தியா முழுவதும் வரதட்சணை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தமிழ்நாட்டில் உள்ள திருப்பூரில் ரிதன்யா என்ற பெண் வரதட்சணை (Dowry) கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதை விட கொடுமையான விஷயம் ஒன்று தற்போது உத்தரபிரதேசத்தை அடுத்த கான்பூரில் நடந்துள்ளது. இதில், வரதட்சணைக்காக மாமியார் தனது மருமகளை பாம்பை விட்டு கொலை செய்யும் அளவிற்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கான்பூர் போலீசார் மாமியார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ன நடந்தது..?

ரேஷ்மா என்ற பெண் ஷாநவாஸை கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே ரேஷ்மாவின் மாமியார் ரேஷ்மாவிடம் வரதட்சணை கேட்க தொடங்கியுள்ளார். திருமணம் ஆன ஆரம்பத்தில், ரேஷ்மாவிடம் ரூ. 1.5 லட்சம் கேட்கப்பட்டது. அதை, ரேஷ்மாவின் தந்தை எப்படியே பிரட்டி கொடுத்துள்ளார். ஆனால், அதன்பிறகு இந்த கோரிக்கை ரூ. 5 லட்சமாக எட்டியது.

ALSO READ: இளைஞரை குழந்தை திருமணம் செய்த இளம் பெண் மீது போலீஸ் வழக்குப்பதிவு!

இதை கொடுக்கமுடியாமல் ரேஷ்மாவின் குடும்பத்தார் கஷ்டப்பட்டுள்ளனர். வரதட்சணை பணம் கிடைக்காத விரக்தியில் கடந்த 2025 செப்டம்பர் 18ம் தேதி ரேஷ்மாவை அவரது மாமியார் பழைய பொருட்கள் போட்டு வைக்கும் அறையில் தள்ளி அடைத்துள்ளார். மேலும், அந்த அறையில் மின்சார வசதியும் துண்டிக்கப்பட்டுள்ளது. பின்னர், அந்த மாமியார் ஒரு நாகப்பாம்பை வடிகால் வழியாக அறைக்குள் விட்டனர்.

இதை எதையும் அறியாத ரேஷ்மா மூடிய அறைக்குள் இருந்துள்ளார். திடீரென நள்ளிரவில் அந்த பாம்பு ரேஷ்மாவின் காலை கடித்துள்ளது. அப்போது, அந்த மாமியார் ரேஷ்மாவை காப்பாற்றாமல் வெளியே நின்று சிரித்து கொண்டிருந்தார். வலி தாங்க முடியாத ரேஷ்மா தனது பெற்றோருக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்தார், அதன் பிறகு அவரது சகோதரி ரிஸ்வானா சம்பவ இடத்திற்கு வந்து மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவர்களின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவரின் நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது.

ALSO READ: Drinks Party-ல் தகராறு.. நிர்வாணமாக்கி அடித்து கொலை செய்யப்பட்ட நபர்.. நண்பர்கள் வெறிச்செயல்!

காவல்நிலையத்தில் புகார்:

ரேஷ்மாவின் சகோதரி ரிஸ்வானா அளித்த புகாரின் அடிப்படையில், ரேஷ்மா கணவர் ஷாநவாஸ், அவரது மாமியார், மாமனார், மைத்துனர், மைத்துனர் உட்பட ஏழு பேர் மீது கொலை முயற்சி மற்றும் வரதட்சணை கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட ரேஷ்மா ஹாலெட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் அவர் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளார். போலீசார் விசாரணையைத் தொடங்கி, பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.