மாணவர்கள் கவனத்துக்கு! நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு ஒத்திவைப்பு.. தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
NEET Exam Hall Ticket: நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஹால் டிக்கெட் வெளியிடும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு ஒத்தி வைப்பு
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளான எம். பி. பி. எஸ்., பி. டி. எஸ்., சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட பிற மருத்துவ படிப்புகளுக்கான தகுதி தேர்வான நீட் தேர்வு மே 3- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் சுமார் 26 லட்சத்து 27 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வு நாடு முழுவதும் சுமார் 552 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 26-ஆம் தேதி) வெளியிடப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்திருந்தது. இதற்காக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்த நிலையில், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படாது என தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நீட் தகுதி தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு
இது தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது: நாடு முழுவதும் மே 3- ஆம் தேதி மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தகுதி தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட இருந்தது. ஆனால், சில நிர்வாக காரணங்களால் ஹால் டிக்கெட் வெளியிடுவதில் சற்று இடையூறு ஏற்பட்டது. எனவே, நாளை திங்கள் கிழமை ( ஏப்ரல் 27) காலை 10 மணிக்கு நீட் தகுதி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட உள்ளன.
மேலும் படிக்க: வெளியானது சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. பார்ப்பது எப்படி?
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்
இந்த ஹால் டிக்கெட்டுகளை மாணவ, மாணவிகள் https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள் நுழைந்து தங்களது விண்ணப்ப எண் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பித்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. மேலும், நீட் தேர்வு ஹால் டிக்கெட்டுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு அல்லது நீட் தேர்வு ஹால் டிக்கெட்டில் அறிவுறுத்தல்கள் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு ஏதேனும் ஆவணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீட் தேர்வு நடைபெறும் விதம்
அதோடு, தேர்வு நடைபெறும் நாளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள், தற்காலிக விடை குறிப்புகள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள ஐ.இ. கல்வி இணையதளத்தை பார்வையிடலாம். தேசிய தேர்வுகள் முகமை நீட் தகுதி நுழைவு தேர்வை ஓ. எம். ஆர். தாளில், பேனா மற்றும் காகித முறையில் நடத்த உள்ளது. இந்த தேர்வில் 180 கேள்விகளுக்கு 720 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வானது 3 மணி நேரம் நடைபெறும். மதிப்பெண் வழங்கும் முறையை பொறுத்தவரை, ஒரு சரியான பதிலுக்கு 4 மதிப்பெண்களும், தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண்ணும் கழிக்கப்படும் என தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: புத்தகங்களை ஓரமா வைங்க.. நாளை முதல் கோடை விடுமுறை.. எத்தனை நாள்கள் தெரியுமா.. வெளியான குளு குளு அறிவிப்பு!