பணத்தை வாரி வழங்கிய ATM.. போட்டி போட்டுக்கொண்டு குவிந்த பொதுமக்கள்.. எங்கு தெரியுமா?
ATM Machine Dispense Extra Cash | அன்றாட நிதி தேவைகளுக்காக ஏராளமான பொதுமக்கள் ஏடிஎம் மையங்களை பயனபடுத்துகின்றனர். இந்த நிலையில், தெலங்கானாவில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் உள்ளீடு செய்த தொகைக்கு அதிகமான தொகை வந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் மிகுந்த ஆச்சர்யத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தெலங்கானாவில் (Telangana) உள்ள ஒரு ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மையத்தில் உள்ளீடு செய்த தொகைக்கு அதிகமாக பணம் வழங்கப்பட்டதால் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு பணத்தை எடுத்துள்ளனர். ஏடிஎம் மையங்கள் உள்ளீடு செய்த தொகையை மட்டுமே வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பான முறையில் பணம் வழங்கி வரும் நிலையில், இந்த ஏடிஎம் கூடுதலாக பணம் வழங்கியது பொதுமக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஏடிஎம் இயந்திரம் கூடுதலாக பணம் வழங்கிய சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தெலங்கானாவில் வாரி வாரி பணத்தை வழங்கிய ஏடிஎம்
தெலங்கான மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள யாகுத் புரா என்ற பகுதியில் ஏடிஎம் மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற நபர் ஒருவர் ஏடிஎம் கார்டை உள்ளிட்ட ரூ.3 ஆயிரத்தை உள்ளீடு செய்துள்ளார். ஆனால், அவர் உள்ளீடு செய்வததற்கு மாறாக அவருக்கு ரூ.4 ஆயிரம் பணம் வந்துள்ளது. இதனால் அவர் குழப்பமடைந்துள்ளார். அவருக்கு மட்டும் தான் அந்த சிக்கல் என நினைத்தால் அவரை தொடர்ந்து வந்த மற்றொரு நபரும் ரூ.3 ஆயிரத்தை உள்ளிட்டுள்ளார். முதலில் வந்த நபருக்கு ரூ. 4 ஆயிரம் பணம் வந்ததை போலவே அவருக்கும் ரூ.4 ஆயிரம் பணம் வந்துள்ளது.
பணம் எடுக்க ஏடிஎம் மையத்திற்கு குவிந்த பொதுமக்கள்
அந்த வகையில் ஏடிஎம் மையத்திற்கு வந்த மூன்றாவது நபருக்கும் ரூ.3 ஆயிரத்திற்கு பதிலாக ரூ.4 ஆயிரம் வந்துள்ளது. ரூ.4 ஆயிரம் பணம் வந்த அனைவரது வங்கி கணக்கிலும் ரூ.3 ஆயிரம் மட்டுமே எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இந்த செய்தி அங்கிருந்த பொதுமக்களுக்கு காட்டுத்தீ போல் வேகமாக பரவியுள்ளது. இதன் காரணமாக உற்சாகமடைந்த பொதுமக்கள் பலர் தாங்களும் ஏடிஎம் மையத்திற்கு வந்து பணம் எடுக்க முயன்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏடிஎம் மையங்களில் பொதுவாக சரியான தொகை மட்டுமே வரும். அதில் எந்த வித தவறும் நடந்துவிடாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்பட்ட இந்த கோளாறு அதிகாரிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.