வெளிநாட்டு பெண்ணிடம் 400 மீட்டருக்கு ரூ.18,000 கட்டணம் வசூலித்த டாக்ஸி டிரைவர்.. கைது செய்த மும்பை போலீஸ்!

Mumbi Police Arrested Taxi Driver For Cheating US Woman | அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் மும்பைக்கு சுற்றுலா வந்துள்ளார். அந்த பெண்ணிடம் வெறும் 400 மீட்டர் தூரத்திற்கு டாக்சி ஓட்டுநர் ஒருவர் ரூ.18,000 கட்டணம் வசூலித்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு பெண்ணிடம் 400 மீட்டருக்கு ரூ.18,000 கட்டணம் வசூலித்த டாக்ஸி டிரைவர்.. கைது செய்த மும்பை போலீஸ்!

பாதிக்கப்பட்ட பெண்

Updated On: 

31 Jan 2026 14:13 PM

 IST

மும்பை, ஜனவரி 31 : உலக அளவில் இருந்து ஏராளமான வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், அமெரிக்காவை (America) சேர்ந்த அர்ஜெண்டினா அரினோ என்ற இளம் பெண், மகாராஷ்டிட்ரா (Maharashtra) மாநிலம், மும்பை பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளார். அவ்வாறு இந்தியாவுக்கு வந்த சுற்றுலா பயணியிடம் டாக்சி ஓட்டுநர் ஒருவர் அதிகப்படியான கட்டணம் வசூலித்த நிலையில், அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

400 மீட்டர் தூரத்திற்கு ரூ.18,000 வசூலித்த டாக்சி ஓட்டுநர்

அர்ஜெண்டினா மும்பை விமான நிலையத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தூரத்தில் உள்ள விடுதி ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், ஜனவரி 12, 2026 அன்று மும்பை வந்த அவர் விமான நிலையத்தில் இருந்து விடுதிக்கு செல்வதற்காக டாக்சி ஒன்றை புக் செய்துள்ளார். இந்த நிலையில், அர்ஜெண்டினா ஏமாற்ற முயன்ற அந்த டாக்சி டிரைவர் அவரை நேர் வழியில் அழைத்துச் செல்லாமல் சுமார் 30 நிமிடங்கள் மாற்று வழியில் டாக்சியை ஓட்டியுள்ளார்.

இதையும் பாடிங்க : 4 பெண் குழந்தைகள்.. ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு மீண்டும் பிரசவித்த தம்பதி.. காத்திருந்த டிவிஸ்ட்!

200 டாலர்கள் கட்டணம் வசூலித்த டாக்சி ஓட்டுநர்

பயணத்தின் முடிவில் ஓட்டலில் அர்ஜெண்டினாவை இறக்கி விட்ட டாக்சி ஓட்டுநர், அந்த சுற்றுலா பயணியிடம் 200 அமெரிக்க டாலர்க்ளை கட்டணமாக வசூலித்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் ரூ.18,000 ஆகும். அந்த பெண்ணும் அவர் 30 நிமிடம் டாக்சியை ஓட்டிச் சென்றதால் அந்த பணத்தை கொடுத்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் அது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, அதில் மும்பை காவல் துறையையும் அவர் டேக் செய்துள்ளார்.

இதையும் படிங்க : சபரிமலை தங்க திருட்டு வழக்கு..நடிகர் ஜெயராமிடம் வாக்குமூலம்…பரபரப்பு தகவல்!

அந்த வெளிநாட்டு பெண்ணின் எக்ஸ் பதிவு வைரலான நிலையில், இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், வெளிநாட்டு பெண்ணிடம் மோசடி செய்த திஷ்ராஜ் என்ற 50 வயது டாக்சி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

14 நாட்களிலேயே ஓடிடியில் வெளியான கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம்
எங்கள் எதிர்வினை வருத்தத்துகுரியதாக இருக்கும்.... ஈரான் அரசு எச்சரிக்கை
மோகன்லாலின் எல்367 படத்துக்கும் துரந்தர் படத்துக்கும் உள்ள தொடர்பு?
குட்டி யானையின் பிறந்த நாளை கேக் வெட்டிக்கொண்டாடிய நபர் - வைரலாகும் வீடியோ