மாணவர்களுக்கு இணைய வழி கல்வியை தொடங்க வேண்டும்.. பிரதமர் மோடியின் மேலும் ஒரு முக்கிய அறிவுரை!
PM Narendra Modi's Next Advice | பொதுமக்கள் ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்குவது, வெளிநாட்டு பயணம் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் கூறியிருந்த நிலையில், தற்போது மாணவர்களுக்கு இணைய வசி கல்வி கற்பித்தலை தொடங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இந்திய பிரதமர் மோடி
வதோதரா, மே 12 : மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் கல்வி கற்பிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) தெரிவித்துள்ளார். ஏற்கனவே, தங்கம் வாங்குவது உள்ளிட்டவற்றை ஒரு வருடத்திற்கு மேற்கொள்ள வேண்டாம் என்று பிரதமர் கூறியது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த அறிவிப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது குறித்து பிரதமர் மோடி என்ன கூறியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கிய பிரதமர் மோடி
ஐதராபாத்தில் மே 10, 2026 அன்று பேசிய பிரதமர் மோடி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உலக அளவில் கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோ, டீசல் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் அந்நிய செலாவணியை சேமிக்க, அவற்றை சிக்கனமாக பயன்படுத்துவது நம் அனைவரின் பொறுப்பாகும் என்று கூறியிருந்தார். குறிப்பாக ஒரு ஆண்டுக்கு திருமணத்திற்காக தங்கம் வாங்க வேண்டாம், வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம், வீட்டில் இருந்து பணி செய்யுங்கள் உள்ளிட்ட சில முக்கிய அறிவுரைகளையும் அவர் பொதுமக்களுக்கு வழங்கினார்.
இதையும் படிங்க : ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் – பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துங்கள் – பிரதமர் மோடி அறிவுரை
மாணவர்களுக்கு இணைய வழியில் கல்வி கற்பிக்க தொடங்க வேண்டும் – பிரதமர்
இந்த நிலையில் தான், மாணவர்களுக்கு ஆன்லைனில் கல்வி கற்பிப்பதை தொடங்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், வதோதராவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கடந்த சில ஆண்டுகளாக உலகமே அசாதாரண சூழலை எதிர்க்கொண்டு வருகிறது. முதலில் கொரோனா, அதன் பின்னர் சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார சவால், இப்போது மேற்கு ஆசியா போர் காரணமாக உலக நாடுகள் கடும் சவால்களை எதிர்க்கொண்டுள்ளன.
இதையும் படிங்க : முதலமைச்சராகும் விஜய்.. ஒடிசாவில் மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்த கலைஞர்!
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நெருக்கடியை கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியது. இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய நெருக்கடியை மேற்கு ஆசிய போர் ஏற்படுத்தியுள்ளது. நாம் அனைவரும் எப்படி கொரோனாவை கடந்து வந்தோமோ அதேபோல, இந்த சவாலையும் நிச்சயம் கடந்து வருவோம். இதன் பாதிப்பு மக்களுக்கு ஏற்படாத வகையில் முயற்சிகளை அரசு மேற்கொள்ளும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.