Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரயில்களில் இனி 8 மணி நேரத்திற்கு முன்னதாகவே அட்டவணை.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை!

Southern Railway Extends Train Schedule Release | ரயில்களில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கான பட்டியல் பயண நேரத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டு வந்த நிலையில், அது 8 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. தற்போது இந்த புதிய நேர அட்டவணை நேற்று (ஜூலை 05, 2025) அமலுக்கு வந்துள்ளது.

ரயில்களில் இனி 8 மணி நேரத்திற்கு முன்னதாகவே அட்டவணை.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 06 Jul 2025 08:19 AM

சென்னை, ஜூலை 06 : ரயில்களில் 8 மணி நேரத்திற்கு முன்பாகவே ரயில் பயண அட்டவணை (Train Travel Schedule) வெளியிடும் நடைமுறையை பின்பற்றுமாறு ரயில்வே கோட்டங்களுக்கு தெற்கு ரயில்வேயின் (Southern Railway) வணிகப்பிரிவு சுற்றரிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, ரயில்களில் 8 மணி நேரத்திற்கு முன்பாகவே அட்டவணை வெளியிடும் முறை நேற்று (ஜூலை 05, 2025) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய நடைமுறை பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படும் நிலையில், ரயில்வேயில் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய முறை குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரயில்களில் இனி 8 மணி நேரத்திற்கு முன்னதாக அட்டவணை வெளியிடப்படும்

ரயில்களில் பயணம் செய்ய முன்கூட்டியே முடிவு செய்து முன்பதிவு செய்த பயணிகளுக்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு அட்டவணை வெளியிடப்பட்டு வந்தது. இதன் காரணமாக கடைசி நேரத்தில் முன்பதிவு உறுதியாகததால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த நடைமுறை சிரமத்தை கொடுப்பதால் இதில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என பயணிகள் ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில், பயணிகள் இந்த கோரிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது ரயில்களில் அட்டவணை வெளியிடப்படும் நடைமுறை நான்கு மணி நேரத்திற்கு பதிலாக எட்டு மணி நேரமாக மாற்றி அவர் உத்தரவிட்டார். அமைச்சரின் உத்தரவின் பெயரில் புதிய முன்பதிவு அட்டவணை வெளியிடும் நடைமுறையை ரயில்வே வாரியம் வெளியிட்டது.

நேற்று முதல் அமலுக்கு வந்த முக்கிய மாற்றம்

அதில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான முன்பதிவு அட்டவணை முந்தைய நாள் இரவு 8 மணிக்கு தயாரிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதே போல மதியம் 2 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 5 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பாகவே முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டது.

இந்த நடவடிக்கையால், காத்திருப்போர் பட்டியில் உள்ள பயணிகள் தங்களுடைய டிக்கெட் நிலையை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும் என்றும் கடைசி நேரங்களில் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க முடியும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரயில் டிக்கெட் முனபதிவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் நேற்று (ஜூலை 05, 2025) முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.