ஓடும் ரயிலில் இதை பண்ணாதீங்க.. ரூ.1000 அபராதம்.. ரயில்வே எடுத்த முடிவு!
Southern Railway : ரயில்களில் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்தாலோ, ரயில்களில் சாகச பயணம் மேற்கொண்டாலோ ரூ.1,000 வரை அபராதம் விதிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதுபோன்று பயணம் செய்யும் போது விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க, தெற்கு ரயில்வே இந்த முடிவை எடுத்துள்ளது.

சென்னை, மே 22 : ஓடும் ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ரூ.1,000 வரை அபராதம் விதிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்யும்போது விபத்துகளை ஏற்படுவதை தவிர்க்க, இந்த முடிவை தெற்கு ரயில்வே எடுத்துள்ளது. இந்தியாவில் ரயில் சேவை முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக உள்ளது. நாள்தோறும் ரயில்களில் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர். விரைவாகவும், குறைந்த கட்டணமும் இருப்பதால் மக்கள் பெரிதும் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து தரப்பு மக்களும் எளிதாக ரயில்களில் பயணிக்கும் வகையில் டிக்கெட் கட்டணமும் உள்ளது. அதே நேரத்தில், ரயில்களில் அவ்வப்போது விபத்துகளும் அரங்கேறி வருகின்றன.
ரயில் படிக்கட்டில் பயணம் செய்தால் ரூ.1,000 அபராதம்
குறிப்பாக, ரயில்களில் ஆபத்தான முறையில் பயணிப்பதும், படிக்கட்டுகளில் அமர்ந்து பயணிப்பதால் விபத்துகள் அதிகளவில் நடக்கின்றன. நீண்ட தூரம் செல்லும் விரைவு ரயில்கள், மின்சார ரயில்களில் பயணிகள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர். பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், படிக்கட்டுகளில் அமர்ந்து வருகின்றனர்.
மேலும், இளைஞர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு வீடியோ எடுத்து வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படுகின்றன. மேலும், பயணிகள் உயிரிழந்தும் வருகின்றனர். இதுபோன்ற விபத்துகளை தடுக்க தெற்கு ரயில்வே முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது, படிக்கட்டுகளில் பயணம் செய்தாலும், ரயில்களில் சாகச பயணம் மேற்கொண்டலோ ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படுவதாகத தகவல் வெளியாகி உள்ளது.
அதிகாரிகள் கூறுவது என்ன?
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “ரயில்வே சட்டம் 1989 பிரிவின் கீழ் படிக்கட்டுகளில் பயணம் செய்வது குற்றமாகும். இதுபோன்று ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 6 மாதம் சிறைக்கும் செல்லலாம். இதுபோன்று பயணிகள் பயணிப்பதை தடுக்க கண்காணிப்பும் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்றனர். எனவே, ரயில் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட உள்ளது. இது எப்போது அமலுக்கு வரும் என்ற தகவல் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதற்கெல்லாம் அபராதம்?
இந்திய ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பது குற்றமாகும். இதற்கு ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். ரயில்களில் பயணம் செய்யும்போது புகை பிடித்தாலோ, மதுபானம் அருந்திலோ ரூ.200 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படலாம். வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் பயணிகள் பதிவு செய்த பெட்டியில் பயணித்தால் ரூ.500 முதல் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். சரியான டிக்கெட் இல்லாமல் பயணிக்கு நபர்களுக்கு ரூ.250 அபராதம் வசூலிக்கப்படலாம். எனவே, பயணிகள் ரயில்வே விதிமுறைகளுக்கு ஏற்ப பயணிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.