பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்.. 3 பேர் உயிரிழப்பு.. 50க்கும் மேற்பட்டோர் காயம்!

Puri Jagannath Rath Yatra Stampede : ஒடிசா மாநிலம் பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். குண்டிகா கோயில் அருகே ரதங்கள் சென்றுக் கொண்டிருந்தபோது, இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்..  3 பேர் உயிரிழப்பு.. 50க்கும் மேற்பட்டோர் காயம்!

பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்

Updated On: 

29 Jun 2025 12:44 PM

ஒடிசா, ஜூன் 29 : ஒடிசா மாநிலம் (Odisha Puri) பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையின்போது (Puri Jagannath Rath Yatra Stampede) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 2025 ஜூன் 29ஆம் தேதியான இன்று அதிகாலை 4.30 மணியளவில் குண்டிச்சா கோயில் அருகே நடந்த ரத யாத்திரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த பலரும் கீழே விழுந்துள்ளனர். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவர்களில் பிரபாதி தாஸ் மற்றும் பசந்தி சாஹு என்ற இரண்டு பெண்கள் மற்றும் 70 வயதான பிரேமகாந்த் மொஹந்தி ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. மூவரும், குர்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ரத யாத்திரைக்காக வந்ததும் தெரியவந்துள்ளது. ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோயில் மிகவும் பிரசித்த பெற்றது. இந்த கோயிலுக்கு நாடு முழுவதும் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த கோயிலில் ஆண்டுதோறும் ரத யாத்திரை வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை 

இந்த ரத யாத்திரையின்போது, லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். ஒடிசா மக்கள் மட்மின்றி, நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் ரத யாத்திரையில் பங்கேற்று தரிசனம் மேற்கொள்வார்கள். அதே  நேரத்தில் ரத யாத்திரையின்போது கூட்ட நெரிசல் ஏற்படும்.

இதில் ஆண்டுதோறும்  பக்தர்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில்,  2025 ஜூன் 29ஆம் தேதியான இன்று அதிகாலை ரத யாத்திரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

பூரியில் உள்ள ஜெகநாதன் கோயில் அருகே உள்ள குண்டிகா கோயில் அருகே ரத யாத்திரை நடந்துக் கொண்டிருந்தபோது, இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. இந்த யாத்திரையின்போது,  சாமியை தரிசிக்க போது, ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலரும் கீழே விழுந்தனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி

இதில் 3 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் பிரேம்காந்த் மொஹந்தி (80), பசந்தி சாஹு (36) மற்றும் பிரபாதி தாஸ் (42) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய உயர் மட்ட விசாரணை நடத்தப்படும் என்று மாநில சட்ட அமைச்சர் பிருத்விராஜ் ஹரிசந்தன் கூறினார். கூட்ட நெரிசலுக்கு காரணமானவர்கள் மீது முழுமையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

 

Related Stories