இமாச்சல பிரதேசத்தை புரட்டி போட்ட மழை.. 78 பேர் உயிரிழப்பு.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Himachal Pradesh Flood : வடமாநிலங்களில் ஒன்றான ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தை புரட்டி போட்ட மழை.. 78 பேர் உயிரிழப்பு.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழை

Updated On: 

07 Jul 2025 12:25 PM

இமாச்சல பிரதேசம், ஜூலை 07 : இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் (Himachal Pradesh Flood) இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலச்சரிவு போன்றவற்றால் சிக்கி இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. இந்தியாவில் வடகிழக்கு பருவமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தென் மாநிலங்களில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை என்றாலும் வட மாநிலங்களில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், வட மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்களில் நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஹிமாச்சல பிரதேசத்தில் மழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், உயிரிழப்போரின் எண்ணிக்கை 78ஐ தாண்டியுள்ளது.

2025 ஜூலை 6 ஆம் தேதி நிலவரப்படி, மழை தொடர்பான சம்பவங்களால் 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 28 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாகவும் மாநில பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. திடீர் வெள்ளத்தால் 14 பேர் இறந்தனர் என்றும் நீரில் மூழ்கி எட்டு பேர் இறந்தனர் என்றும் மின்சாரம் தாக்கி எட்டு பேர் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், நிலச்சரிவிலும் சிலர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெள்ளத்தில் 37 பேர் காணாமல் போனதாக தெரிகிறது. அதோது, 115 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மண்டி மாவட்டம் முழுவதும் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

110 மீ.மீ மழை பதிவானது


கடந்த 24 மணி நேரத்தில் இமாச்சல பிரதேசத்தில் 110 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மேக வெடிப்பால் மண்டி மற்றும் சம்பா மாவட்டங்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும்,  2025 ஜூலை 9ஆம்  தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிர்மௌர், காங்க்ரா, மண்டி ஆகிய மூன்று மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கையும், சிம்லா, சோலன், ஹமிர்பூர், பிலாஸ்பூர், உனா, குலு மற்றும் சம்பா ஆகிய ஏழு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதோடு, உத்தரகண்டில் உள்ள தெஹ்ரி, உத்தரகாஷி, ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாமோலி, உகிமத், கன்சாலி, நரேந்திர நகர், தனால்டி, துண்டா மற்றும் சின்யாலிசௌர் உள்ளிட்ட 2025 ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.