ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு.. புதைந்த வீடுகள்.. 4 பேர் உயிரிழப்பு

Jammu Kashmir Cloud Burst : ஜம்மு காஷ்மீர் கதுவா பகுதியில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு..   புதைந்த வீடுகள்.. 4 பேர் உயிரிழப்பு

காஷ்மீரில் மேக வெடிப்பு

Updated On: 

17 Aug 2025 11:14 AM

காஷ்மீர், ஆகஸ்ட் 17 : ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு   ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் (Jammu kashmir Cloud Burst) உயிரிழந்த நிலையில், பலர்  இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.   ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஹிமாச்சல பிரதேசம், காஷ்மீர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில தினங்களாகவே  மழை பெய்து வருகிறது. இந்த மழையால்  வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட, ஜம்மு காஷ்மீரில் கிஷ்த்வார் மாவட்டத்தில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இந்த மேகவெடிப்பு காரணமாக வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 60 பேர் பரிதாபமாக உயிரிந்தனர். அதோடு, 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு

மேலும், அப்பகுதியில் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் காஷ்மீரில் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது.  கதுவா பகுதியில் மேக வெடிப்ப ஏற்பட்டுள்ளது. கதுவாவின் ராஜ்பாக் பகுதியின் ஜோத் கிராமத்தில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் வெள்ளம் ஏற்பட்டது. அங்கிருந்த பல வீடுகள் அப்படியே புதைந்துள்ளன. இதனை அறிந்த மீட்பு குழுக்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு இடிபாடுகளில் சிக்கயுள்ளவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயம் அடைந்துள்ளனர்.

Also Read : தாயகம் திரும்பும் சுபான்ஷு சுக்லா.. பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்..

4 பேர் உயிரிழப்பு


இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், ” கசுவா பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பால் காவல்நிலையம், வீடுகள், ரயில் பாதை சேதம் அடைந்தன. மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. 4 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்எனக் கூறினார்.

Also Read : தரை இறங்கும்போது இண்டிகோ விமானத்தில் பரபரப்பு.. அலறிய பயணிகள்!

இந்த சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வருத்தம் தெரிவித்ததோடு, மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கதுவா மாவட்டத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நிவாரணம், மீட்பு மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.