ராஜ் பவன் மக்கள் பவனாக பெயர் மாற்றம் – இதன் பின்னால் உள்ள முக்கிய காரணம் என்ன ?

Major Governance Shift : இந்தியாவில் ஆளுநர்கள் வசிக்கும் ராஜ் பவன் இனி லோக் பவன் அதாவது மக்கள் பவன் என அழைக்கப்படும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது மக்கள் நலனை முன்னிறுத்தும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ராஜ் பவன் மக்கள் பவனாக பெயர் மாற்றம்  - இதன் பின்னால் உள்ள முக்கிய காரணம் என்ன ?

லோக் பவனாக மாறிய ராஜ் பவன்

Published: 

02 Dec 2025 16:30 PM

 IST

புதுடெல்லி டிசம்பர் 2: இந்தியாவின் பொதுத்துறை அமைப்புகளில் அமைதியான, ஆனால் ஆழமாக ஒரு மாற்றம் நிகழ்ந்து வருகிறது. ஆட்சி என்பது அதிகாரம் செலுத்துவதற்கான இடமல்ல, அது மக்களுக்கு சேவை செய்வதற்கான பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையிலான மாற்றத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதம் உள்ள ஆளுநர்கள் (Governor) வசிக்கும் ராஜ் பவன்கள், மக்களாட்சியைக் குறிக்கு வகையில் லோக் பவன் அதாவது மக்கள் பவன் (Lok Bhavan) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.  அதாவது ஆட்சி என்பது அதிகாரம் அல்ல அது பொறுப்பு எனவும், பதவி அல்ல அது சேவை எனவும் பொதுநலன் தான் அதன் குறிக்கோள் என்பதை உணர்த்தும் வகையில் இந்த மாற்றம் கொண்டுவரப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆட்சியின் கீழ் அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றும் மக்களுக்கு சேவை செய்வதற்கான மனப்பாங்குடன் இருக்க வேண்டும் என்ற நோக்கில், பல முக்கியமான பெயர் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாட்டின் மிக முக்கிய சாலையாக இருந்த ராஜ்பாத் தற்போது கர்தாவ்யா பாத் அதாவது  கடமைப் பாதை என மாற்றப்பட்டது. இந்த பெயர் மாற்றம் அதிகாரம் என்பது உரிமை அல்ல, அது மக்களுக்கு செய்ய வேண்டிய கடைமை என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் மாற்றப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : SIR பணிச்சுமை.. உத்தர பிரதேசத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி ஆசிரியர் தற்கொலை!

பிரதமரின் இல்லத்தின் பெயர் மாற்றம்

கடந்த 2016 ஆம் ஆண்டு,  பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் இருந்த இடம்,  லோக் கல்யாண் மார்க் அதாவது மக்கள் நலப் பாதை என்று மறுபெயரிடப்பட்டது. இந்த பெயர் மாற்றம், ஆட்சியின் மையமாக மக்கள் நலன் இருப்பதை வலியுறுத்துகிறது. அதே போல பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள புதிய வளாகம், சேவைத் தலம் என்று அழைக்கப்படுகிறது.  இது நாட்டின் முக்கிய தீர்மானங்கள் உருவாகும் இடம் என்பதை உணர்த்தும் வகையில், அதன் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவின் மத்திய நிர்வாக மையமான செயலக வளாகத்திற்கு  கர்தாவ்ய பவன் அதாவது கடமைப் பவன் என பெயரிடப்பட்டுள்ளது. பொது சேவை என்பது தவறக்கூடாத கடமை என்பதை உணர்த்தும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நிர்வாகம் என்பது மக்களுக்கு நாம் செய்யும் சேவை என்பதை நினைவில் கொள்ளும் வகையில்  உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : “எதிர்கட்சிகள் எப்படி செயல்பட வேண்டுமென ஆலோசனை வழங்க தயார்”.. பிரதமர் மோடி பரபர பேச்சு!!

லோக் பவனாக மாறும் ராஜ் பவன்

மாநில ஆளுநர்கள் வசிக்கும் ராஜ் பவன்கள்,  மக்களை மையமாகக் கொண்ட ஆட்சித் தத்துவத்தை பிரதிபலிக்க லோக் பவன்கள் அதாவது மக்கள் என மறுபெயரிடப்பட்டு வருகின்றன. இது ஆட்சியின் பிரதானம் மக்கள் மட்டுமே என்பதை நிரூபிக்க இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அனைத்து மாற்றங்களும் நிர்வாக மாற்றமாக அல்லாமல், சிந்தனையில் ஏற்படும் மாற்றமாக பார்க்கப்படுகிறது. அதாவது மக்கள் பிரதிநிதிகளுக்கும், அரசு அலுவலர்களுக்கும் அதிகாரத்தை விட பொறுப்பும், பதவியை விட சேவை தான் முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளன.

மனிதர்களை குளிப்பாட்டும் மெஷினை உருவாக்கிய ஜப்பான் - அப்படி என்ன ஸ்பெஷல்?
இந்த முட்டையின் விலை ரூ.236 கோடி தானாம்.. ஷாக் ஆகாதீங்க!!
நேபாளம் வெளியிட்ட புதிய 100 ரூபாய் நோட்டில் இடம்பெற்ற இந்திய பகுதி.. எல்லை குறித்து மீண்டும் உருவான சர்ச்சை!!
இந்தியாவின் கோடீஸ்வர பிச்சைக்காரர் இவர் தான்.. அவரது சொத்து மதிப்பு தெரியுமா?