மசோதா நிறைவேற்றப்படாததற்கு நாட்டு பெண்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் – பிரதமர் மோடி உரை..

PM Modi Address To Nation: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதில், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறாததற்கு நாட்டு பெண்களிடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மகளிர் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற கனவை எதிர்க்கட்சிகள் தகர்த்துள்ளனர்.

மசோதா நிறைவேற்றப்படாததற்கு நாட்டு பெண்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்  - பிரதமர் மோடி உரை..

கோப்பு புகைப்படம்

Updated On: 

18 Apr 2026 21:17 PM

 IST

ஏப்ரல் 18, 2026: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறாததற்கு நாட்டு பெண்களிடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.  மகளிர் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற கனவை எதிர்க்கட்சிகள் தகர்த்துள்ளனர். மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா லோக்சபாவில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார் பிரதமர் நரேந்திர மோடி. பெண்களின் கனவு சிதைந்ததை நாடு முழுவதும் பார்த்ததாக அவர் தெரிவித்தார். காங்கிரஸ், திமுக, டிஎம்சி, எஸ்பி போன்ற கட்சிகளின் சுயநல அரசியல் பெண்களை பாதித்ததாகவும் அவர் கூறினார். எதிர்க்கட்சிகள் பெண்களின் உரிமைகளை பறித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேறாததற்காக, நாட்டின் பெண்களிடம் மன்னிப்பு கேட்டார் மோடி. நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள், மகள்களிடம் பேசவே தான் வந்துள்ளேன் என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகளை விமர்சித்த பிரதமர்: 

எதிர்க்கட்சிகளைம் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். அவர்களின் குறுகிய மனப்பான்மை மற்றும் சுயநல அரசியல் காரணமாக, நாட்டின் தாய்மார்களும் சகோதரிகளும் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியதாகிவிட்டது என குற்றம் சாட்டினார்.

சில எதிர்க்கட்சிகள் இந்த மசோதா தோல்வியை கொண்டாடியதாகவும், பெண்கள் இந்த அவமானத்தை மறக்க மாட்டார்கள் என்றும் கூறினார். “இந்த மக்கள் ‘நாரி சக்தி’யை சிறுமைப்படுத்துகிறார்கள்” எனவும், ஆனால் இந்திய பெண்களுக்கு உண்மை தெரியும் எனவும் மோடி தெரிவித்தார்.

மசோதாவின் நோக்கம்

பல ஆண்டுகளாக பெண்களுக்கு கிடைக்காத உரிமைகளை வழங்குவதற்காகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 2029ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலிலிருந்து பெண்களின் பங்குபற்றலை உறுதி செய்வதே இந்த சட்ட திருத்தத்தின் நோக்கம். இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் பெண்களைச் செயல்பாட்டுடன் இணைத்து, அவர்களை வலுப்படுத்துவதே மசோதாவின் குறிக்கோள் என்றும் மோடி விளக்கினார்.

மசோதா தூய்மையான மற்றும் நேர்மையான முயற்சியாக இருந்தது; அது காலத்தின் தேவையாக இருந்தது என்றும் அவர் நாட்டைத் தொடர்புகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..