PM Modi’s Gujarat Visit: எவ்வளவு அழுத்தம் வந்தாலும் நம் பலம் அதிகரிக்கும்.. டிரம்ப் வரி விதிப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி!

PM Modi Launches RS 5400 Crore Gujarat Projects: பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் ரூ. 5400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். விவசாயிகள், சிறு தொழிலாளர்கள் நலன் குறித்தும், வெளிநாட்டுப் பொருட்களைத் தவிர்க்கவும் அழைப்பு விடுத்தார்.

PM Modis Gujarat Visit: எவ்வளவு அழுத்தம் வந்தாலும் நம் பலம் அதிகரிக்கும்.. டிரம்ப் வரி விதிப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி!

பிரதமர் மோடி

Published: 

25 Aug 2025 21:10 PM

அகமதாபாத், ஆகஸ்ட் 25: அகமதாபாத்தில் ரூ. 5400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், பிரதமர் மோடி (PM Modi) ஆபரேஷன் சிந்தூர், டிரம்பின் வரிவிதிப்பு (Trump Tariff) மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றை குறித்து பேசினார். இன்று உலகில், பொருளாதார நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஒவ்வொருவரும் தங்கள் சொந்த அரசியலைச் செய்வதில் மும்முரமாக உள்ளனர் என்றும், அதை நாம் நன்றாகப் பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.

ALSO READ: ரொம்ப யோசிக்காதீங்க.. ஜெகதீப் தன்கர் ராஜினாமா விஷயத்தில் அமித்ஷா காட்டம்!

எவ்வளவு அழுத்தத்தை எதிர்கொண்டாலும்..

விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களின் நலன் குறித்து பேசிய பிரதமட் மோடி, “எனது சிறு தொழில்முனைவோர், சிறு கடக்காரர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்களிடம், நான் காந்தியின் மண்ணிலிருந்து பேசுகிறேன், அது சிறு தொழில்முனைவோராக இருந்தாலும் சரி, விவசாயிகளாக இருந்தாலும் சரி, என் நாட்டின் கால்நடை வளர்ப்பாளர்களாக இருந்தாலும் சரி, உங்கள் நலன் மோடிக்கு மிகவும் முக்கியமானது என்று நான் கூறுவேன். சிறு தொழில்முனைவோர், விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட எனது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. எவ்வளவு அழுத்தம் வந்தாலும், தாங்கும் வலிமையை நாங்கள் தொடர்ந்து அதிகரிப்போம். இன்று உலகில் நடக்கும் பொருளாதார நலன் சார்ந்த அரசியலையும் நீங்கள் அனைவரும் காண்கிறீர்கள்” என்று டிரம்பின் வரி விதிப்பை குறித்து சொல்லாமல் சொன்னார்.

வெளிநாட்டு பொருட்களை தவிருங்கள்:


வெளிநாட்டு பொருட்கள் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மத்திய அரசாங்கம் ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை செய்து வருகிறது. அதன்படி, தீபாவளிக்கு முன்பு உங்களுக்கு ஒரு பெரிய பரிசு கிடைக்கும். ஜிஎஸ்டி சீர்திருத்தம் காரணமாக, நமது சிறு தொழில்கள் நிறைய உதவிகளைப் பெறும், மேலும் பல விஷயங்களுக்கான வரி குறைக்கப்படும். இந்த தீபாவளி, அது வணிக வர்க்கமாக இருந்தாலும் சரி அல்லது எங்கள் குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் இரட்டை போனஸ் மகிழ்ச்சியைப் பெறப் போகிறது” என்றார்.

ALSO READ: பிரதமர் மோடியின் பட்டம் பகிரங்கப்படுத்தப்படாது.. மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்! 

தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசிய பிரதமர் மோடி, “பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா எவ்வாறு பழிவாங்கியது என்பதை உலகம் கண்டது. நாட்டையும் சமூகத்தையும் எவ்வாறு பாதுகாப்பது என்பதை ஸ்ரீ கிருஷ்ணர் நமக்குக் கற்றுக் கொடுத்தார். எதிரியைக் கண்டுபிடித்து தண்டிக்கும் நீதி மற்றும் பாதுகாப்பின் கேடயமாக சுதர்சன சக்கரத்தை அவர் மாற்றினார். இந்தியாவின் முடிவுகளில் இன்று நாடும் உலகமும் அனுபவிக்கும் உணர்வு இதுதான். பயங்கரவாதிகளையும், அவர்களின் எஜமானர்களையும், அவர்கள் எங்கு மறைந்திருந்தாலும், இன்று நாம் விட்டுவைக்க மாட்டோம். பஹல்காம் தாக்குதலுக்கு நாம் எவ்வாறு பழிவாங்கினோம் என்பதை உலகம் கண்டது. அனைத்தும் 22 நிமிடங்களில் அழிக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் நமது இராணுவத்தின் வீரத்திற்கும், சுதர்சன சக்கரத்தை ஏந்திய மோகனின் மன உறுதிக்கும் அடையாளமாக மாறியுள்ளது.” என்று தெரிவித்தார்.