மிசோரம் மாநிலத்தின் முதல் ரயில் பாதை.. பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்..

PM Modi: மிசோரம் மாநிலத்தின் முதல் ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், “ கடினமான நிலப்பரப்பு உட்பட பல சவால்களைக் கடந்து, இந்த பைராபி–சாய்ராங் ரயில்வே பாதை ஒரு எதார்த்தமாக மாறியுள்ளது” என தெரிவித்துள்ளார்.

மிசோரம் மாநிலத்தின் முதல் ரயில் பாதை.. பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்..

பிரதமர் மோடி

Published: 

13 Sep 2025 13:37 PM

 IST

மிசோரம், செப்டம்பர் 13, 2025: மிசோரத்தில் பைராபி–சாய்ராங் புதிய ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 13, 2025 தேதியான இன்று தொடங்கி வைத்தார். சுதந்திரத்துக்கு பிறகு தலைநகரை இந்திய ரயில்வேயுடன் இணைக்கும் முதல் ரயில் பாதை இதுவாகும். இந்த ரயில் பாதை ரூ.8,070 கோடி மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையில் சுமார் 45 சுரங்கப்பாதைகள் மற்றும் 55 மேம்பாலங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 52 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த பாதையில் 87 சிறிய பாலங்களும் அடங்கும். மிசோரம் மாநிலத்தின் முதல் ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

காணொலி மூலம் ரயில் பாதையை திறந்து வைத்த பிரதமர் மோடி:

முன்னதாக விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்து இறங்கினார். ஆனால் மோசமான வானிலை காரணமாக விழா நடைபெறும் லம்முவால் மைதானத்திற்கு அவரால் செல்ல முடியவில்லை. இதனைத் தொடர்ந்து உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, காணொளி மூலம் மிசோரம் தலைநகர் ஐஸ்வாலை டெல்லியுடன் இணைக்கும் மாநிலத்தின் முதல் “ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ்” ரயிலை அவர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் படிக்க: திடீரென ஏற்பட்ட பிரசவ வலி.. காட்டில் குழந்தை பெற்ற பெண்.. தாயும், சேயும் நலம்!

பல சவால்களைத் தாண்டி இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் 5 சாலை மேம்பாலங்கள் மற்றும் 6 சுரங்கப்பாதைகள் உள்ளன. இந்த ரயில் பாதை அந்தப் பகுதி மக்களுக்கு பாதுகாப்பான, செலவு குறைந்த, லாபகரமான பயண சேவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிசோரம் மக்களுக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்:


அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “துரதிர்ஷ்டவசமாக மோசமான வானிலை காரணமாக ஐஸ்வாலில் உங்களுடன் நேரில் வர முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். ஆனால் காணொளி மூலமாக உங்கள் அன்பையும் பாசத்தையும் என்னால் உணர முடிகிறது. இது நாட்டிற்கு, குறிப்பாக மிசோரம் மக்களுக்கு, ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். இன்று முதல் ஐஸ்வால் இந்தியாவின் ரயில் வரைபடத்தில் இடம்பெறும்.

மேலும் படிக்க: 10 பெண் அதிகாரிகள்.. உலகின் முதல் முப்படை சேவை கப்பல்.. சிறப்பம்சம் என்ன? எங்கெல்லாம் பயணிக்க உள்ளது?

சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வால் ரயில் பாதைக்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்று அதை பெருமையுடன் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம். கடினமான நிலப்பரப்பு உட்பட பல சவால்களைக் கடந்து, இந்த பைராபி–சாய்ராங் ரயில்வே பாதை ஒரு எதார்த்தமாக மாறியுள்ளது. நம் பொறியாளர்களின் திறமைகளும் தொழிலாளர்களின் மனப்பான்மையும் இதை சாத்தியமாக்கியுள்ளது” என்று தெரிவித்தார்.