India vs Pakistan Live Updates: இந்தியா – பாகிஸ்தான் பதட்டம் முடிவுக்கு வந்தது..
India vs Pakistan War Tension : ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது இந்தியா பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது. இதற்கு பாகிஸ்தானும் இந்தியா மீது ஏவுகணை, ட்ரோன்களை வீசியது. இந்திய பாதுகாப்பு துறையில் உள்ள அதி நவீன உபகரணங்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்ற பதட்டம் மேலோங்கியுள்ளது.

LIVE NEWS & UPDATES
-
பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் நிறுத்தம்.. இந்தியா அறிவிப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் இன்று அதாவது 2025 மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் நிறுத்தியதாக இந்தியா அறிவித்துள்ளது. இதுகுறித்து, இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவிக்கையில், “மாலை 5 மணி முதல் துப்பாக்கி சண்டையும், ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த இருநாடுகளும் முடிவு செய்துள்ளது என கூறியுள்ளார்.
-
போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் – உறுதிப்படுத்திய பாகிஸ்தான் அமைச்சர் இஷாக் டார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்புக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் உறுதிப்படுத்தியுள்ளார்.
-
தாஜ்மஹாலின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சோதனை..ஆக்ராவில் நடந்த பயிற்சி
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தாஜ்மஹாலின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சோதிக்கும் வகையில் உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் பயிற்சி நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சி சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
-
போர் நிறுத்தத்துக்கும் இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் – டொனால்ட் ட்ரம்ப்
இந்தியாவும் பாகிஸ்தானும் நடந்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்.. தன்னார்வலராக ஆர்வம் காட்டும் இளைஞர்கள்
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தின் காரணமாக, சண்டிகர் இளைஞர்கள் பெருமளவில் சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்களாக சேர ஆர்வம் காட்டியுள்ளனர்.
-
இந்தியா – பாகிஸ்தான் மோதல்.. மும்பை காவல்துறை பிறப்பித்த உத்தரவு
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, மும்பை காவல்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி மும்பையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்றும், பட்டாசுகளின் சத்தத்தை யாரும் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.
-
ஒட்டுமொத்த இந்தியாவும் ஒன்றுபட்டுள்ளது – டெல்லி முதலமைச்சர்
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான தற்போதைய சூழ்நிலை குறித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி அனைத்து மக்களும் நம் நாட்டுடன் ஒற்றுமையாக நிற்கிறோம். தேசிய அவசரநிலையின் இந்த நேரத்தில் ஆயுதப்படைகளைத் தவிர இந்தியாவின் அனைத்து குடிமக்களும் ஒற்றுமையாக உள்ளனர் என்று அவர் கூறினார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதட்டங்கள் உலகளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. 2025, ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பகல்ஹாமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுடனான அத்தனை தொடர்புகளையும் இந்தியா புறக்கணித்தது. தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள தீவிரவாத முகாம்களை அடியோடு அழித்தது. கடந்த 2025 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி அடுத்தடுத்து நடைபெற்று வரும் இருநாடுகளுக்கிடையேயான மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தாக்குதல்களை இந்திய ராணுவம் திறம்பட முறியடித்துள்ளது. இதுதொடர்பான தகவல்களை நாம் காணலாம்.
Published On - May 10,2025 5:00 PM