Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பஹல்காம் தாக்குதல்.. ஒரு நிமிடம் மவுன அஞ்சலி.. பயங்கரவாதத்திற்கு எதிராக குவிந்த முஸ்லீம்கள்

Pahalgam Attack : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது  பயங்ரவாதிகள் தாக்குதல் நடத்தியல் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர்.

பஹல்காம் தாக்குதல்.. ஒரு நிமிடம் மவுன அஞ்சலி.. பயங்கரவாதத்திற்கு எதிராக குவிந்த முஸ்லீம்கள்
இஸ்லாமியர்கள்Image Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 Apr 2025 11:43 AM

காஷ்மீர், ஏப்ரல் 26: ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் (Pahalgam Terror Attack) உயிரிழந்த 26 பேருக்கு ஜாமியா மசூதியில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜாமியா மசூதியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மசூதியில் முதல்முறையாக மவுன அஞ்சலி செலுத்திப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், ஜாமியா மசூதியின் தலைமை போதகரான மிர்வாய்ஸ் உமர் பாரூக் பயங்கரவாதிகளுக்கு எதிராக கண்டன குரலை எழுப்பினார்.

ஒரு நிமிடம் மவுன அஞ்சலி

மேலும், நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் 2025 ஏப்ரல் 25ஆம் தேதியான நேற்று தொழுகையின்போது கருப்பு பட்டை கையில் அணிந்து பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

ஜம்மு காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளை கொலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீர் முதல் ஹைதரபாத் வரை இஸ்லாமியர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹைதராபாத், பாட்னா, கொல்கத்தா, டெல்லி மற்றும் பல நகரங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள், பஹல்காமில் நடந்த தாக்குதல் முழு நாட்டின் மீதான தாக்குதல் என்றும், குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் கூறினர்.  இதுகுறித்து கொல்கத்தாவில் இஸ்லாமியர் ஒருவர் கூறுகையில், “நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல் நடக்கும் போதெல்லாம், முஸ்லிம்கள் அதை எப்போதும் கண்டிக்கிறார்கள்.

பயங்கரவாதத்திற்கு எதிராக குவிந்த முஸ்லீம்கள்


இந்தியாவின் 140 கோடி மக்களும் பயங்கரவாதத்திற்கு எதிராக நிற்கிறார்கள். பாஜக, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுடன் நமக்கு சித்தாந்த வேறுபாடுகள் இருக்கலாம். இருப்பினும், நாடு தாக்கப்படும்போது, ​​அனைத்து முஸ்லிம்களும் தேசத்திற்காக ஒன்றுபட்டு நிற்பார்கள்” என்று கூறினார்.

மற்றொரு இஸ்லாமியர் கூறுகையில், “இந்த சம்பவத்தால் ஒவ்வொரு இந்தியரும் வேதனையடைந்துள்ளனர், இதை கண்டிக்கிறோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.

2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது  பயங்ரவாதிகள் தாக்குதல் நடத்தியல் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும், பயங்கரவாதிகள் ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!
விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!...
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?...
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி...
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்...
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!...
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!...
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்...
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி...
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு...
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!...
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!...