நீட் இளநிலை தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி? எப்போது வெளியாகிறது? முழு விவரம்
NEET UG Exam Result 2025 : நீட் இளநிலை தேர்வுக்கான முடிவுகள் 2025 ஜூன் 14ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது. தேர்வு முடிவுகளுக்கு முன்பு, விடைக்குறிப்பு மற்றும் விடைத்தாள் நகல்களை தேசிய தேர்வு முகமை வெளியிடுகிறது. இதில், ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கவும் அவகாசம் வழங்கும். எனவே, நீட் தேர்வு முடிவுகளை எப்படி காண்பது போன்ற விவரங்கள் இங்கு பார்ப்போம்.

சென்னை, ஜூன் 11 : நீட் இளநிலை தேர்வு முடிவுகள் (neet ug result 2025) விரைவில் வெளியாக உள்ளது. அதாவது, நீட் இளநிலை தேர்வு முடிவுகள் 2025 ஜூன் 14ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஓமியோபதி, யுனானி உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆண்டுதோறும் நீட் எனும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தி வருகிறது. இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் சீட் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மொத்தம் 1.12 லட்சம் மருத்துவ இடங்கள் உள்ளன. அரசு மருத்துவ கல்லூரிகளில் 55,648 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 53,256 மருத்துவ சீட்டுகளும் உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை 12,050 மருத்துவ இடங்களில் உள்ளன.
விரைவில் நீட் இளநிலை தேர்வு முடிவுகள்
அரசு மருத்துவ கல்லூரிகளில் 5,600 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் 6,450 இடங்களும், பிடிஎஸ் சீட் 3,100 உள்ளன. இதன் அடிப்படையில் தான், மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த தேர்வை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதி வருகின்றனர்.
அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான நீட் இளநிலை தேர்வு 2025 மே 4ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வை நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு நடந்து முடிந்த நிலையில், மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்கு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.




இந்த நிலையில், இந்தியா டுடே தகவலின்படி நீட் இளநிலை தேர்வு முடிவுகள் 2025 ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. எனவே, நீட் தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது என்ற விவரங்களை பார்ப்போம். நீட் இளநிலை தேர்வு எழுதிய மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்ற இணையதளம் மூலம் ரிசல்ட்டை பார்க்கலாம்.
நீட் தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?
- முதலில் மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
- அதில் முகப்பு பக்கத்தில் NEET UG 2025 என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் உங்கள் விவரங்கள் கேட்கப்படும்
- உங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதி, மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண், பாஸ்வோர்டு, கேப்ட்சா ஆகியவை உள்ளீட வேண்டும். அதன்பின், உங்களது தேர்வு மதிப்பெண்கள் காட்டப்படும்
- அதன்பிறகு, உங்கள் தேர்வு முடிவு நகலை download என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தேர்வு முடிவுகளுக்கு முன்னதாக, தேசிய தேர்வு முகமை விடைக்குறிப்பை வெளியிடுகிறது. தேர்வுக்கான விடைக்குறிப்பு மற்றும் மாணவர்களின் விடைத்தாள் நகல்களை என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். விடைக்குறிப்பில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம். ஒரு கேள்விக்கு ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.