துணை ஜனாதிபதி தேர்தல்.. சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்.. உடனிருந்த பிரதமர் மோடி!
Vice President Election : குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது, பிரதமர் மோடியும் உடன் இருந்தார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் 2025 செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போது வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

என்டிஏ வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்
டெல்லி, ஆகஸ்ட் 20 : குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு (Vice President Election) தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் (NDA Candidate C.P.Radhakrishnan) வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது, பிரதமர் மோடியும் உடன் இருந்தார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் 2025 செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போது வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இரண்டாவது உயரிய அரசமைப்பு பதவியான குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு 2025 செப்டம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். உடல்நிலையை காரணம் காட்டி அவர் ராஜினாமா செய்தார். இதனை அடுத்து, அடுத்து துணை ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதற்கான வேட்புமனு தாக்கல் 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் 25ஆம் தேதி வேட்புமனு தாக்கல் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். பின்னர், துணை ஜனாதிபதி தேர்தல் 2025 செப்டம்பர் 9ஆம் தேதி நடக்கிறது. இதற்கு, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்ரா ஆளுநரும், தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். அதே நேரத்தில், எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளராக ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
Also Read : தமிழரை நிறுத்தினால் மட்டும் போதுமா? பாஜக வேட்பாளர் குறித்து கனிமொழி கேள்வி!
சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்
#WATCH | NDA candidate for Vice President post, C.P. Radhakrishnan files his nomination in the presence of PM Narendra Modi. pic.twitter.com/CsVolb3mYh
— ANI (@ANI) August 20, 2025
வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் ஒரே நாளே இருக்கிறது. இதனையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதியான இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பிரதமர் மோடி முன்னிலையில் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரும் உடன் சென்றனர். மேலும், இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டியும் 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதியான இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
Also Read : துணை குடியரசுத் தலைவர் தேர்தல்.. இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு!
யார் இந்த ராதாகிருஷ்ணன்?
சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஜார்க்கண்ட் மற்றும் தெலுங்கானாவின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். பாஜகவின் மூத்த தலைவரான இவர், கோவையிலிருந்து இரண்டு முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராகவும் பணியாற்றினார். நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை கொண்டிருப்பதால், சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.