ரூ.1 கோடி லாட்டரி விழுந்தவரை கடத்திய கும்பல்.. கேரளாவில் பரபரப்பு சம்பவம்!
Man Abducted For Lottery Ticket | கேரளாவை சேர்ந்த சாதிக் என்ற நபருக்கு லாட்டரியில் ரூ.1 கோடி விழுந்த நிலையில், அந்த நபரை மர்ம கும்பல் ஒன்று கடத்திச் சென்று லாட்டரி டிக்கெட்டை பிடுங்கிக்கொண்டு இறக்கி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணூர், ஜனவரி 16 : கேரளாவின் (Kerala) கண்ணூர் மாவட்டம், பரவூரை சேர்ந்த சாகித் என்ற 46 வயது நபருக்கு டிசம்பர் 30, 2025 அன்று லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது. இந்த நிலையில், லாட்டரியில் விழுந்த பணம் கைக்கு வர தாமதமாகும் என்பதாலும், அதற்கு வரி பிடித்தம் செய்யப்படும் என்பதாலும், அவர் அந்த லாட்டரி டிக்கெட்டை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி, லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்வதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு வந்துள்ளார்.
திட்டம் போட்டு சாதிக்கை கடத்திய கும்பல்
சாதிக் லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்ய முயற்சி செய்வதை அறிந்த கும்பல், அதனை வைத்து சதி திட்டம் தீட்டியுள்ளது. அதாவது, அதிக தொகை கொடுத்த லாட்டரி டிக்கெட்டை பெற்றுக்கொள்வதாக கூறி அவரை பரவூர் நகருக்கு அந்த கும்பல் வரவழைத்துள்ளது. அதனை நம்பி அவரும் அங்கு தனது நண்பருடன் சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று சாதிக் மற்றும் அவரது நண்பரை வாகனத்தில் வலுகட்டாயமாக ஏற்றிச் சென்றுள்ளது.
இதையும் படிங்க : Indian Open Badminton 2026: போட்டிக்கு நடுவே புறா எச்சம்! இந்தியன் ஓபனில் தொடரும் சர்ச்சை.. போட்டி பாதியில் நிறுத்தம்!
லாட்டரி டிக்கெட்டை பறித்துக்கொண்டு இறக்கி விட்ட கும்பல்
சிறிது தூரம் சென்ற பிறகு அந்த கும்பல் சாதிக்கின் நண்பரை கீழே இறக்கி விட்டுள்ளது. ஆனால், சாதிக்கை காரில் இருந்து கீழே இருக்காமல் அந்த கும்பல் அழைத்துச் சென்றுள்ளது. பின்னர் அவரிடம் இருந்து லாட்டரி டிக்கெட்டை பறித்துக்கொண்டு அந்த கும்பல் அவரை இரவு 11.30 மணிக்கு இறக்கி விட்டுள்ளது. கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பித்த சாதிக், தனக்கு நடைபெற்ற கொடூர சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க : நாய் கடித்து 10 வயது சிறுமி பரிதாப பலி.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்!
இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த கும்பலை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.