அபுதாபியில் இருந்து இந்தியாவுக்கு வயிற்றில் தங்கம் கடத்தி வந்த நபர்.. சுங்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

Man Smuggled Gold In Stomach | அபுதாபியில் இருந்து அகமதாபாத் வந்த விமானத்தில் வந்து இறங்கிய ஷாருக் என்ற நபரை அதிகாரிகள் சோதனை செய்ததில், அவர் தனது வயிற்றில் லட்சக்கணக்கிலான தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கடத்தி கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது.

அபுதாபியில் இருந்து இந்தியாவுக்கு வயிற்றில் தங்கம் கடத்தி வந்த நபர்.. சுங்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

மாதிரி புகைப்படம்

Published: 

22 Feb 2026 16:21 PM

 IST

அகமதாபாத், பிப்ரவரி 22 : குஜராத்தின் (Gujarat) அகமதாபாத் (Ahmadabad) விமான நிலையத்திற்கு அபுதாபியில் இருந்து ஏர் அரேபியா என்ற விமானம் வந்துள்ளது. அந்த விமானத்தில் ஷாருக் என்ற பயணி ஒருவர் வந்துள்ளார். அந்த பயணி நோயாளியாக வந்து இறங்கியுள்ளார். இருப்பினும் அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக சுங்க அதிகாரிகள் அவரை அழைத்து வந்து சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது தான் அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

உலோக பொருளை விழுங்கியதாக கூறிய பயணி

ஷாருக்கை சுங்க அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், அவர் உலோக பொருட்களை விழுங்கியுள்ளதாக கூறியுள்ளார். இந்த நிலையில், அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவரை உடனடியாக நகர தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி பின்னர் அவரின் உத்தரவின் அடிப்படையில் அகமதாபாத் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதையும் படிங்க : நண்பனின் மனைவியை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய நபர்.. அதிர்ச்சி சம்பவம்!

தங்கத்தை வயிற்றில் கடத்தி வந்தது விசாரணை அம்பலம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாருக்கை ஆய்வு செய்த போது பல அதிர்ச்சி சம்பவங்கள் நடந்துள்ளது. அதாவது அவரது வயிற்றில் 3 சிலிண்டர் வடிவ கேப்சூல்களும், ஸ்டீல் நிறத்தில் உருண்டை வடிவ பந்து போன்ற பொருளும் இருந்துள்ளது. அதுமட்டுமன்றி அவருடைய மலக்கழிவில் இருந்து 3 உருளை வடிவ கேப்சூல்களில் 135.2 கிராம் எடை கொண்ட தூய 24 காரட் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிங்க : பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த மருத்துவர்கள்.. 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிசத்திற்கு வந்த சம்பவம்!

அவரது மலத்தில் இருந்து எடுக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.21.89 லட்சம் ஆகும். அதுமட்டுமன்றி அந்த இளைஞரின் மலத்தில் இருந்து 4வது கேப்சூல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் விலை மதிப்பில்லாத உலோகம் இருந்துள்ளது. இதன் மூலம் அந்த பயணி அபுதாபியில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories
“மக்கள் நலனுக்காக பாடுபட்டுவர் ஜெயலலிதா”.. மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!
இந்தியாவுக்கு வெளிநாட்டினர் எதற்காக சுற்றுலா செல்ல வேண்டும்… ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரின் வீடியோ வைரல்!
லிப்டில் சிக்கிய இரு குழந்தைகள்.. சாமர்த்தியமாக செயல்பட்ட சிறுமி.. அடுத்து நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!
பாஜக தேசிய தலைவருக்கு ஆசி வழங்கிய மகந்த் சுவாமி மகாராஜ் – வைரலாகும் படங்கள்
நண்பனின் மனைவியை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய நபர்.. அதிர்ச்சி சம்பவம்!
பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த மருத்துவர்கள்.. 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிசத்திற்கு வந்த சம்பவம்!
ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!