மும்பையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய நபர்.. அந்த வழியாக ரயில் வந்ததால் பரபரப்பு!
Man Slept On Train Track In Mumbai | மும்பையில் உள்ள சிவாஜி நகர் ரயில் நிலையத்தின், தண்டவாளத்தில் ஒருவர் படுத்து தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக ரயில் வந்த நிலையில், பொதுமக்கள் கத்தி கூச்சலிட்டும் அந்த நபர் எழுந்திருக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய நபர்
புனே, பிப்ரவரி 17 : மகாரஷ்டிரா (Maharashtra) மாநிலம், புனேவில் (Pune) ரயில் வந்துக்கொண்டு இருந்த பாதையில், மதுபோதையில் உருவர் படுத்து தூங்கிக்கொண்டு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் ரயில் நிலையத்தில் படுத்து உறங்கிய நிலையில், ரயிலை ஓட்டி வந்த லோகோ பைலட் சுதாரித்து செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த பரபரப்பு சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய நபர்
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில், சிவாஜி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இது மும்பையின் மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளதன் காரணமாக எப்போதும் இந்த ரயில் நிலையம் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில், இந்த ரயில் நிலையத்தில் ஒருவர் வெள்ளை நிற துணியை போர்த்திக்கொண்டு ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : India AI Impact Summit : ஏஐ உச்சி மாநாடு.. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.. என்னவெல்லாம் ஸ்பெஷல் தெரியுமா?
மது போதையில் ரயில் தண்டவாளத்தில் தூங்கிய நபர்
அந்த நபர் படுத்து தூங்கிக்கொண்டு இருந்த அதே தண்டவாளத்தில் ரயில் ஒன்று இருந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். ஆனால், நல்ல மதுபோதையில் தூங்கிக்கொண்டு இருந்த நபருக்கு அந்த சத்தம் காதில் விழவில்லை. இதனை தொடர்ந்து அந்த ரயில் நிலையத்துக்கு வந்த லோகோ பைலட்டிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வாடிக்கையாளரின் 2 கிலோ தங்கத்தை திருடி விற்பனை செய்த மேலாளர்.. அதிர்ச்சி சம்பவம்!
உடனடியாக சுதாரித்துக்கொண்ட அவர், ரயிலை மெதுவாக இயக்கி உள்ளார். பின்னர் அந்த நபரின் அருகே சென்று வேகமார ஒலி எழுப்பியுள்ளார். ஆனால், ரயில் ஹாரன் சத்தம் கூட கேட்காத அளவு அந்த நபர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் படி அந்த நபர் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு ரயில் புறப்பட்டு சென்றுள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சிரிது நேரம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.