திருமணம் செய்துக்கொள்ள கூறிய இளம் பெண்ணை மாஸ்டர் பிளான் போட்டு கொலை செய்த நபர்.. பகீர் பின்னணி!

Man Killed Young Woman To Avoid Marriage | கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில் 35 வயது நபர் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த நபருக்கு திருமணமான நிலையில், தன்னை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று இளம் பெண் கூறியதால் அந்த பெண்ணை கொலை செய்துள்ளார்.

திருமணம் செய்துக்கொள்ள கூறிய இளம் பெண்ணை மாஸ்டர் பிளான் போட்டு கொலை செய்த நபர்.. பகீர் பின்னணி!

கொலை செய்த நபர்

Published: 

29 Jan 2026 13:40 PM

 IST

திருவனந்தபுரம், ஜனவரி 29 : கேரள (Kerala) மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், எலத்தூர் பகுதியை சேர்ந்தவர் வைசாக் என்ற 35 வயது நபர். இவர் கோழிக்கோட்டை சேர்ந்த தனது உறவினரான இளம் பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் சிறுவயது முதலே பழக்கம் இருந்த நிலையில், அது அப்படியே காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், வைசாக் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இருப்பினும் இளம் பெண் உடனான தொடர்பை துண்டிக்காத வைசாக் ,வழக்கம் போல நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

திருமணம் செய்துக்கொள்ளுமாறு வற்புறுத்திய இளம் பெண்

இதற்கிடையே வைசாக்கின் காதலி தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு அவரிடம் கூறியுள்ளார். ஆனால், வைசாக் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவரும் கடும் மன உளைச்சளில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், அந்த இளம் பெண் இனியும் தனக்கு உயிர் வாழ விருப்பமில்லை என வைசாக்கிடம் கூறியுள்ளார். அதற்கு அவரும், தனக்கு உயிர் வாழ விருப்பமில்லை என கூறியதாக தெரிகிறது.

இதையும் படிங்க : அஜித் பவார் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!

இளம் பெண்ணை கொலை செய்த வைசாக்

இருவரும் மனமுடைந்து பேசி வந்த நிலையில், வைசாக் தனது காதலியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஜனவரி 24, 2026 அன்று கக்கோடி பகுதிக்கு தனது காதலியை வரவழைத்த வைசாக், இருவரும் தற்கொலை செய்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார். அதன்படி அந்த இளம் பெண் மரத்தில் கையிறுகளை கட்டி, இருக்கையின் மீது ஏறி நின்றுள்ளார். அப்போது வைசாக், இருக்கையின் கீழே இறங்கி இளம் பெண் நின்றுக்கொண்டு இருந்த இருக்கையை எட்டி உதைத்து அவரை தூக்கில் தொங்க வைத்துள்ளார்.

இதையும் படிங்க : விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மரணம்.. இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி!

பிறகு தனது மனைவியை அழைத்து அந்த இளம் பெண் தற்கொலை செய்துக்கொண்டதாக வைசாக் கூறியுள்ளார். பின்னர் தனது மனைவியுடன் இணைந்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.

உயிரிழந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வைசாக்

அப்போது சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார், இளம் பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதாக ஏமாற்றி பிறகு தற்கொலை செய்துக்கொள்ளலாம் என கூறி கொலை செய்தததும், பிறகு அந்த பெண்ணை பாலியல்  வன்கொடுமை செய்ததையும் கண்டு பிடித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக வைசாக்கை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த அழிந்துபோன பாம்பு இனம்
போர் சூழல்.. பதிலளிக்க தயாராக இருக்கும் ஈரான்..
மீண்டும் ஒரே மேடையில் ஏ.ஆர். ரஹ்மான் - விஜய் சேதுபதி.. எங்கு தெரியுமா?
அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்.. சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்கி குவித்த மக்கள்..