மனைவியை கொலை செய்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய மாஸ்டர் பிளான் போட்ட கணவன்.. 6 மாதங்கள் கழித்து சிக்கியது எப்படி!

Husband Killed Wife with Anesthesia | பெங்களூரில் தனது மனைவிக்கு அடிக்கடி உடல்நல குறைவு ஏற்பட்டு வந்த நிலையில், அவரது கணவர் அவருக்கு தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி கொலை செய்துள்ளார். அவர் இறந்த 6 மாதங்களுக்கு பிறகு இது தெரிய வந்துள்ளது.

மனைவியை கொலை செய்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய மாஸ்டர் பிளான் போட்ட கணவன்.. 6 மாதங்கள் கழித்து சிக்கியது எப்படி!

கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் கொலை செய்த கணவன்

Published: 

16 Oct 2025 19:02 PM

 IST

பெங்களூரு, அக்டோபர் 16 : பெங்களூருவின் மாரத்தஹல்லி பகுதியை சேர்ந்தவர் முனிரெட்டி. இவருக்கு நிகிதா மற்றும் கிருத்திகா ரெட்டி என்று 29 வயதில் இரண்டு மகள்கள் இருந்தனர். அவர்கள் இரண்டு பேரும் மருத்துவர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில், கிருத்திகா ரெட்டிக்கு, மகேந்திரா ரெட்டி என்பவருடன் 2024 ஆம் ஆண்டு மே மாதம் குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்துள்ளனர். அவர்கள் இருவரும் பெங்களூரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

உடல்நல குறைவு காரணமாக தந்தையின் வீட்டுக்கு சென்ற கிருத்திகா

கிருத்திகாவும், அவரது சகோதரியான நிகிதாவும் ஒரே மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளானர். இந்த நிலையில், உடல்நல குறைவு காரணமாக கிருத்திகா தனது தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். ஏப்ரல் 23, 2025 அன்று கிருத்திகாவும் அவரது கணவரும் அறையில் தனியாக இருந்துள்ளனர். அப்போது, கிருத்திகா திடீரென கூச்சலிப்படி மயக்கமடைந்துள்ளார். அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : Rajasthan: சாலையில் தீப்பிடித்த பேருந்து… 20 பேர் உயிரோடு எரிந்த பரிதாபம்

மூடி மறைக்கப்பட்ட உண்மை

கிருத்திகாவின் மரணம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது கிருத்திகாவுக்கு குறைந்த ரத்த அழுத்தம், அஜீரண கோளாறு உள்ளிட்ட சிக்கல்கள் இருந்து வந்ததாகவும் அவற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அதனை நம்பிய கிருத்திகாவின் குடும்பத்தினர் அவர் உடல்நல குறைவால் உயிரிழந்துவிட்டதாக நினைத்து புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.

இதையும் படிங்க : லிஃப்ட் கொடுப்பதாக கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை – இருவர் கைது

விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

இருப்பினும் காவல்துறையின் வலியுறுத்தலின்பேரில் கிருத்திகாவின் அக்கா நிகிதா போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், 6 மாதங்கள் கழித்து கிருத்திகாவின் கணவரை கைது செய்துள்ளனர். காரணம், கிருத்திகாவின் பரிசோதனை முடிவுகளில் அவர் உடல்நல குறைவால் உயிரிழக்கவில்லை என்பதும் அவர் மயக்க மருத்து கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

பகீர் வாக்குமூலம் கொடுத்த கணவன்

இது குறித்து கிருத்திகாவின் கணவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவர், கிருத்திகாவின் உடல்நிலை குறித்து திருமணத்திற்கு முன்னதாக அவரது பெற்றோர்கள் தன்னிடம் கூறவில்லை என்று கூறியுள்ளார். மேலும், கிருத்திகா அடிக்கடி உடல்நல குறைவால் மயக்கமடைந்த நிலையில், அவரை கொலை செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்ததாக அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.