’ நான் சொல்வதை திரித்து சொல்லி, அரசியல் செய்யாதீர்கள் ‘ – முதலமைச்சர் மம்தா பானர்ஜி விளக்கம்..

Durgapur Incident: மேற்கு வங்கம் துர்காபூரில் நடந்த சம்பவம் தொடர்பாக, “மாணவிகள் இரவு நேரத்தில் வெளியே வரக்கூடாது, கல்லூரிகள் அதனை உறுதிப்படுத்த வேண்டும்” என்ற மம்தா பானர்ஜியின் கருத்து பெரும் சர்ச்சைக்கு உள்ளான விஷயமாக மாறியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

’ நான் சொல்வதை திரித்து சொல்லி, அரசியல் செய்யாதீர்கள் ‘ - முதலமைச்சர் மம்தா பானர்ஜி விளக்கம்..

கோப்பு புகைப்படம்

Published: 

13 Oct 2025 13:03 PM

 IST

மேற்கு வங்கம், அக்டோபர் 13, 2025: மேற்கு வங்கத்தில் துர்காபூரில், மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், “மாணவிகள் இரவு நேரத்தில் வெளியே செல்ல கல்லூரிகள் அனுமதிக்கக் கூடாது” என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறிய கருத்து பெரும் சர்ச்சைக்கு உள்ளான விஷயமாக மாறியது. இதனை தொடர்ந்து மம்தா பானர்ஜி அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, தான் சொல்ல வந்த கருத்தை திரித்து பேசப்படுவதாகவும், தான் சொல்ல வந்ததே வேறு என்றும் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில், ஒடிசாவை சேர்ந்த மாணவி ஒருவர் இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பை படித்து வருகிறார். இவர் தனது ஆண் நண்பருடன் அக்டோபர் 11, 2025-ஆம் தேதி மாலை வெளியே சென்று விட்டு இரவு 12.30 மணி அளவில் மீண்டும் கல்லூரி வளாகத்திற்குள் திரும்பினார். அப்போது அந்தப் பெண் மற்றும் ஆண் நண்பரை வழிமறித்த ஒரு கும்பல் மிரட்டி உள்ளனர்.

மேலும் படிக்க: வருமானம் குறையுது.. அமைச்சர் பதவி வேண்டாம்.. சுரேஷ்கோபி முடிவு!

மருத்துவ மாணவிக்கு நடந்தது என்ன?

உடனே மாணவியுடன் வந்த ஆண் நண்பர் அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டார். ஆனால் மருத்துவ மாணவியை அந்த கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மாணவியின் தந்தை அக்டோபர் 12, 2025 தேதி ஆன நேற்று காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, மருத்துவமனையின் நண்பர் உட்பட பலரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவி துர்காபூரில் இருக்கக்கூடிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க: தன் பேக்கரியில் திருடிய நபருக்கு விருது.. இப்படியும் ஒரு உரிமையாளர்!

மம்தா பானர்ஜியின் சர்ச்சை கருத்து:

இந்த சூழலில், இது தொடர்பாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியதாவது, “இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தங்கள் மாணவர்களை குறிப்பாக பெண்களை கவனித்துக் கொள்ள வேண்டும். பெண்கள் இரவில் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது. பெண்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நிச்சயமாக மன்னிக்கப்படமாட்டார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

“மாணவிகள் இரவு நேரத்தில் வெளியே வரக்கூடாது, கல்லூரிகள் அதனை உறுதிப்படுத்த வேண்டும்” என்ற அவரது கருத்து பெரும் சர்ச்சைக்கு உள்ளான விஷயமாக மாறியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.

தான் பேசியது தொடர்பாக விளக்கம் அளித்த மம்தா பானர்ஜி:


இந்த சூழலில் மம்தா பானர்ஜி இது தொடர்பாக விளக்கம் அளித்ததாவது, “ஊடகங்கள் நான் பேசியதை திரித்து சொல்கின்றன. நீங்கள் என்னிடம் ஒரு கேள்வியை கேட்கிறீர்கள், நான் அதற்கு பதில் அளிக்கிறேன். பின்னர், நீங்கள் அதை திரித்து சொல்கிறீர்கள். இந்த வகையான அரசியலை என்னிடம் முயற்சிக்க வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.