கற்களால் தாக்கிக்கொண்ட கிராம மக்கள்.. ம.பி பாரம்பரிய நிகழ்வில் 1,000 பேர் காயம்!
Madhya Pradesh's Violent Tradition | ஆகஸ்ட் 23, 2025 மத்திய பிரதேசத்தில் இரண்டு கிராம மக்கள் கற்களை கொண்டு தாக்கிக்கொள்ளும் நூற்றாண்டுகள் பழமையான வினோத நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் இரண்டு கிராமத்தை சேர்ந்த சுமார் 1,000 மக்கள் காயமடைந்துள்ளனர்.

கோட்டர் மேலா
போபால், ஆகஸ்ட் 24 : மத்திய பிரதேசத்தில் (Madhya Pradesh) நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரிய கோட்டர் மேலா நிகழ்வில் சுமார் 1,000 பேர் படுகாயமடைந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஆற்றின் ஓரம் உள்ள இரண்டு கிராம மக்கள் கற்களை கொண்டு தாக்கிக்கொள்ளும் நிகழ்வு தான் இது. பல ஆண்டுகளுக்கு முன்னர் அந்த இரண்டு கிராமத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடிகள் ஊரை விட்டு தப்பி ஓட முயற்சி செய்த நிலையில், அவர்கள் கொள்ளப்பட்டதன் நிகழ்வாக இந்த நிகழ்வு பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில், இந்த வினோத பாரம்பரியம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கற்களால் தாக்கிக்கொண்ட இரண்டு கிராம் மக்கள்
மத்திய பிரதேச மாநிலம் பந்துர்னா பகுதியில் உள்ள ஜாம் ஆற்று பகுதியில் ஆகஸ்ட் 23, 2025 அன்று இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்பு, காதலித்து ஊரை விட்டு ஓட முயன்ற இளம் காதலர்கள் கொல்லப்பட்டதன் நிகழ்வாக இந்த பாரம்பரியம் தொடரப்படுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்ற கிராம மக்களில் சுமார் 1,000 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இரண்டு பேர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : வரதட்சணை கொடுமை – மகனின் கண்முன்னே பெண் எரித்துக்கொலை – கணவன் கைது
58 மருத்துவர்கள், 600 காவல்துறையினர் பாதுகாப்புடன் நடந்த நிகழ்வு
இந்த பாரம்பரிய நிகழ்வு காலம் காலமாக நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் பலர் இதில் காயமடைவர். இதன் காரணமாக அந்த கிராமத்தின் சார்பில் அங்கு 6 தற்காலிக சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, 58 மருத்துவர்கள், 200 மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி, பாதுகாப்பு கருதி 600 காவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்துள்ளனர். ஆனால், இவ்வளவு ஏற்பாடுகளுக்கு பிறகும் இந்த நிகழ்வில் பலர் காயமடைந்துள்ளனர்.
நிகழ்வின் சிறப்பு அம்சங்கள் என்ன?
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ஸ்வார்கன் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் காட்டில் இருந்து புரசு மரத்தை வெட்டி எடுத்துக்கொண்டு வந்து ஆற்றின் நடுவே நடுவர். அதை அவர்கள் புனித கொடியாக கருதுவர். அதுமட்டும்னறி, அந்த மரத்தை அவர்கள் தங்களது மகளாக முன் நிறுத்துவர். இந்த நிலையில், பந்தன்புரா பகுதி மக்கள் தங்களது மகனை முன் நிறுத்தும் விதமான அந்த மரத்தை கற்கள் கொண்டு தாக்குவர்.
இதையும் படிங்க : தர்மஸ்தலா வழக்கில் திடீர் திருப்பம்.. பெண்களை புதைத்தாக புகார் அளித்தவர் கைது.. ஷாக் பின்னணி!
அந்த மரம் முழுவதுமாக உடையும் வரை இரண்டு கிராம் மக்களும் மாறி மாறி கற்களால் தாக்கிக்கொள்வர். மரம் உடைந்த பிறகு இரண்டு கிராம் மக்களும் இணைந்து கடவுளை வழிபடுவர். இந்த நிகழ்வில் கடந்த காலங்களில் உயிரிழப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இதுவரை 13 பேர் இந்த நிகழ்வின் போது உயிரிழந்துள்ளனர்.