பள்ளி கழிவறையில் குழந்தை பெற்ற 9 ஆம் வகுப்பு சிறுமி.. 28 வயது இளைஞரை வலைவீசி தேடும் போலீஸ்!

School Girl Gave Birth in Toilet | பெங்களூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி கழிவறையிலே குழந்தை பெற்றுள்ளார். அவர் கடந்த சில மாதங்களுக்கு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான நிலையில் அவர் குழந்தையை பெற்றுள்ளார்.

பள்ளி கழிவறையில் குழந்தை பெற்ற 9 ஆம் வகுப்பு சிறுமி.. 28 வயது இளைஞரை வலைவீசி தேடும் போலீஸ்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

30 Aug 2025 08:15 AM

பெங்களூரு, ஆகஸ்ட் 30 : கர்நாடகாவில் (Karnataka) பள்ளி கழிவறையில் 9 ஆம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவி சம்பவத்தன்று கழிவறைக்கு சென்றபோது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மாணவியின் கர்ப்பத்திற்கு 28 வயது இளைஞர் ஒருவர் தான் காரணம் என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில், மாணவியை கர்ப்பமாக்கிய அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பள்ளி கழிவறையில் குழந்தை பெற்றடுத்த மாணவி

கர்நாடகா மாநிலம், ஷாஹாபூர் பகுதியை சேர்ந்தவர் 9 ஆம் வகுப்பு மாணவி. அவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இந்த நிலையில்,  ஆகஸ்ட் 27, 2025 அன்று மாணவி மதியம் இரண்டு மணிக்கு கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், கழிவறையிலே ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடையாள தெரியாத நபரால் மாணவி கர்ப்பமானதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : வரதட்சணை கொடுமை.. கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி பின்னணி!

28 வயது நபரால் கர்ப்பமான 9ஆம் வகுப்பு சிறுமி

மாணவியின் கர்ப்பம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததால் அது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த நிலையில், மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கர்ப்பமக்கியது 28 வயது நபர் என்பதை மட்டும் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில், மாணவி மற்றும் அவரது குழந்தையை மீட்ட போலீசார் அவர்களை சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர்கள் நலமுடன் உள்ளனர்.

இதையும் படிங்க : சத்தீஸ்கரில் கடும் வெள்ளம்.. தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பலி.. சொந்த ஊருக்கு சென்றபோது சோகம்!

வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை

இந்த விவாகாரம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிச விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாணவியின் கர்ப்பம் குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் இருந்த பள்ளி முதல்வர், செவிலியர், விடுதி வார்டன் மற்றும் சிறுமியின் சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.