டிராஃபிக் சிக்னல்கள் இல்லாத இந்தியாவின் முதல் நகரம்.. எது தெரியுமா?
India's First Traffic-Signal Free City | இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து முறையாக இயங்க டிராஃபிக் சிக்னல்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக நகரங்களில் அதிக அளவில் டிராஃபிக் சிக்னல்கள் இருக்கும். இந்த நிலையில், ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரம் டிராஃபிக் சிக்னல்கள் இல்லாத முதல் இந்திய நகரம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

மாதிரி புகைப்படம்
இந்திய சாலைகளில் பயணம் செய்ய வேண்டும் என்றால் டிராஃபிக் சிக்னல்களை (Traffic Signals) தாண்டி தான் செல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக நகரங்களில் பயணம் செய்யும் நபர்கள் டிராஃபிக் சிக்னலில் சில நிமிடங்கள் நின்று செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒருவேளை ஏதேனும் அவசரம் என்றால் டிராஃபிக் சிக்னலில் நிற்காமல் சென்றாலும் அதற்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு, டிராஃபிக் சிக்னல்களால் இந்திய வாகன ஓட்டிகள் கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் உள்ள ஒரு நகரம் டிராஃபிக் சிக்னல் இல்லாத முதல் நகரம் (Traffic Signal Free City in India) என்ற பெருமையை பெற்றுள்ளது. அது என்ன நகரம், அது அந்த சிறப்பை பெற்றதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிராஃபிக் சிக்னல் இல்லாத முதல் இந்திய நகரம்
ராஜஸ்தான் (Rajasthan) மாநிலத்தில் உள்ள கோட்டா (Kota) நகரம் டிராஃபிக் சிக்னல் இல்லாத இந்தியாவின் முதல் நகரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த நகரம் முழுவதும் டிராஃபிக் சிக்னல்கள் இல்லை. கோட்டா மேற்கொள்ளப்பட்டுள்ள அற்புதமான நடவடிக்கையின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. கோட்டாவில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள், வேலைக்கு செல்லும் நபர்கள், பள்ளி கல்லூரில் மாணவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் எந்த வித டிராஃபிக் சிக்னல் தொல்லையும் இன்றி பயணம் செய்கின்றனர்.
இதையும் படிங்க : 100 முறை தோப்புக்கரணம் போட்டதால் பள்ளி மாணவி பலி?.. அதிர்ச்சி சம்பவம்!
சாத்தியமானது எப்படி?
கோட்டாவின் ஊரக வளர்ச்சி அமைப்பு டிராஃபிக்கால் ஏற்படும் சிக்கலை குறைக்க சாலை கட்டுமானங்களில் புதிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. பொதுவாக நான்கு சாலைகள் ஒன்றாக இணையும் இடங்களில் டிராஃபிக் சிக்னல்கள் அமைக்கப்படும். நான்கு பக்கமும் இருந்து வரும் வாகன ஓட்டிகள் ஒருவர் மீது ஒருவர் மோதி விபத்து ஏற்படாத வகையில் பயணம் செய்ய டிராஃபிக் சிக்னல்கள் பயனுள்ளதாக உள்ளன. ஆனால், கோட்டாவில் அத்தகைய நான்கு முனை சாலைகளே இல்லையாம். இதனால் அங்கு டிராஃபிக் சிக்னல்களுக்கான தேவையே இல்லாமல் போயுள்ளது.
இதையும் படிங்க : சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு – அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
கோட்டாவில் ஒரு சாலை மற்றொரு சாலையை சந்திக்காத வகையில் அங்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு டிராஃபிக் சிக்னல்கள் இல்லாமல் பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். டிராஃபிக் சிக்னல்கள் இல்லாததால் பயண நேரம் குறைவது மட்டுமன்றி, குறிப்பிட்ட அளவு வாகனங்களுக்கான எரிபொருட்களை சேமிக்க முடிவதாக அந்த நகரத்தில் வசிக்கும் மக்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.