காத்மண்டுவில் ஹோட்டலுக்கு தீ வைத்த போராட்டக்குழு.. இந்திய பெண் பலி!

காத்மாண்டுவில் நடந்த வன்முறையில் இந்தியாவைச் சேர்ந்த ராஜேஷ் கோலா என்பவர் உயிரிழந்தார். நேபாள அரசின் சமூக வலைத்தளத் தடைக்கு எதிரான போராட்டத்தின்போது, அவர் தங்கியிருந்த ஹோட்டலில் தீ வைக்கப்பட்ட நிலையில் தப்பிக்க முயன்றபோது பலியானார். அவரது கணவர் ராம்வீர் சிங் கோலா காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

காத்மண்டுவில் ஹோட்டலுக்கு தீ வைத்த போராட்டக்குழு.. இந்திய பெண் பலி!

உயிரிழந்த ராஜேஷ் கோலா

Updated On: 

12 Sep 2025 20:41 PM

 IST

உத்தரப்பிரதேசம், செப்டம்பர் 12: நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் வன்முறை வெடித்ததில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர் ராம்வீர் சிங் கோலா, தனது மனைவி ராஜேஷ் கோலாவுடன் நேபாளத்திற்குச் சென்றிருந்தார். அந்த நேரத்தில் அங்கு போராட்டம் வெடித்தது. இதில் கலவரக்காரர்கள் குழு ஒன்று அவர்கள் தங்கியிருந்த ஹயாத் ஹோட்டலுக்கு தீ வைத்தது. இண்ட்ர்ஹ தீ விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து, ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஹோட்டலில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகளை கயிறுகளைப் பயன்படுத்தி வெளியேற்ற முயன்றது. அப்படியான பாதுகாப்பான இடத்திற்கு இறங்க முயற்சித்தபோது, ​​ராஜேஷ் கோலாவின் பிடி நழுவி, அவர் கீழே விழுந்து இறந்தார். அவரது கணவர் ராம்வீர் சிங் கோலா தற்போது படுகாயங்களுடன் நேபாள ஆசிரியர் நிறுவன மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ராஜேஷ் கோலாவின் உடல் கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனையில் இருப்பதாகவும், பிரேத பரிசோதனை இன்னும் நடத்தப்படவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த தம்பதியரின் மகன் ஊடகவியலாளர்களிடம் பேசும்போது, “நாங்கள் இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இப்போது இந்நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கிறோம், சாலை வழியாக இந்தியாவுக்கு பயணிப்போம். நாளை (செப்டம்பர் 13) காலைக்குள் காஸியாபாத்தை அடைந்துவிடுவோம் என்று நம்புகிறோம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்ட 5 வயது சிறுவன்.. பரிதாப பலி.. சோக சம்பவம்!

இப்படியான நிலையில் ராஜேஷ் கோலா உயிரிழந்த சம்பவம் காசியாபாத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பம் வசித்து வந்த வீட்டில், உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார் கூடி, துக்கம் அனுசரித்து வருகின்றனர். நேபாள நாட்டிலிருந்து ராஜேஷ் கோலாவின் உடல் எப்போது வரும் என குடும்பத்தினர் சோகத்துடன் காத்திருக்கின்றனர்.

பற்றி எரிந்த நேபாளம்

நேபாள நாட்டில் அரசுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தடுக்கும் வகையில் சமீபத்தில் 26 வகையான சமூக வலைதளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்து உத்தரவிட்டது. முன்னதாக தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் அனைத்து சமூக வலைதளங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற வலைத்தளங்கள் பதிவு செய்யாமல் இருந்தன. இந்நிலையில் இந்த தடை செப்டம்பர் 4ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அரசின் இந்த நடவடிக்கை நேபாள நாட்டில் வாழும் இளம் சமூகத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:  ஓணம் கொண்டாட்டத்தில் சோகம்.. அரசு ஊழியர் நடனமாடிய போது உயிரிழப்பு

அவர்கள் நேபாள தலைநகர் காத்மண்டுவில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் 20 பேர் பலியாகினர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஜென் இசட் என அழைக்கப்படும் இளம் வயது சமூகத்தினர் அந்த நாட்டை சூறையாடினர். நீதிமன்றம் தொடங்கி அமைச்சர்கள் வீடு வரை பந்தாடப்பட்டது. பல்வேறு இடங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இப்படியான நிலையில் நேபாள நாட்டில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டது. பிரதமராக இருந்த கேபி ஒலி ஷர்மா ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.