Narendra Modi : 75வது பிறந்த நாளை கொண்டாடும் பிரதமர் மோடி.. உலக தலைவர்கள் வாழ்த்து!
Prime Minister Narendra Modi's 75th Birthday | இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 17, 2025) தனது 75வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு உலக தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி
டெல்லி, செப்டம்பர் 17 : இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) இன்று (செப்டம்பர் 17, 2025 ) தனது 75வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். உலக அளவில் மிகச் சிறந்த ஆளுமையாக கருதப்படும் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உலக தலைவர்கள் மட்டுமன்றி இந்திய தலைவர்களும் பிரதமருக்கு அன்பின் வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி கடந்து வந்த பாதை குறித்து விரிவாக பார்க்கலாம்.
8 வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்த பிரதமர் மோடி
1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி குஜராத் மாநிலம் மெக்சனா மாவட்டத்தில் உள்ள வட்நகர் என்ற கிராமத்தில் பிறந்தவர் பிரதமர் நரேந்திர மோடி. இவர் தனது 8 வயதில் இருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வருகிறார். இதற்கிடையே 1985 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவர், தனது ஆர்வம் மிகுந்த பணியால் 1998 ஆம் ஆண்டு பாஜக பொதுச் செயலாளராக உயர்த்தப்பட்டார். அதன் பிறகு 2001 ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட அவர் தொடர்ந்து 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தார். அதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு பிரதமரான மோடி, தற்போது மூன்றாவது முறையாக ஆட்சி செய்து வருகிறார்.
இதையும் படிங்க : மணிப்பூரில் வன்முறையை கைவிட வேண்டும்.. வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற வேண்டும் – பிரதமர் மோடி
பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளனர்.
டிரம்ப் பிறந்த நாள் வாழ்த்து
“Just had a wonderful phone call with my friend, Prime Minister Narendra Modi. I wished him a very Happy Birthday! He is doing a tremendous job. Narendra: Thank you for your support on ending the War between Russia and Ukraine!” – President Donald J. Trump pic.twitter.com/2IAOyHWKEt
— The White House (@WhiteHouse) September 16, 2025
பிரதமர் மோடி சிறந்த பணி செய்து வருகிறார். உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்தியதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
ஓபிஎஸ் பிறந்த நாள் வாழ்த்து
— O Panneerselvam (@OfficeOfOPS) September 16, 2025
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.