Army press conference : ஆபரேஷன் சிந்தூருக்கு போடப்பட்ட பிளான்.. நடந்தது எப்படி? ராணுவத்தினர் விளக்கம்!

What is Operation Sindoor : பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவத்தின் இன்று அதிரடி தாக்குதல் நடத்தினர். ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட இந்த தாக்குதல் குறித்து இந்திய ராணுவத்தினரும், விமானப்படையும் விளக்கம் அளித்துள்ளன. தாக்குதல் பிளான் மற்றும் நடந்தது எப்படி என விளக்கம் அளித்துள்ளனர்.

Updated On: 

07 May 2025 15:51 PM

2025 மே 7ஆம் தேதியான இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு மேல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.  இந்த தாக்குதலில் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள  9 இடங்களில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக ராணுவத்தினர் மற்றும் விமானப்படை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சிந்தூர் தாக்குதல் குறித்து, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ராணுவத்துடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தாக்குதல் தொடர்பான பல விஷயங்களை தெளிவுபட கூறினார். அதில், லஷ்கர் மற்றும் பாகிஸ்தான் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய காரணம், கலவரங்களைத் தூண்டிவிட்டு, அந்த இடத்தின் வளர்ச்சி மற்றும் சுற்றுலாத் துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதே என்றார்.

ராணுவத்தினர் விளக்கம்:

மேலும் கூறிய அவர்,பாகிஸ்தான் பயங்கரவாத உள்கட்டமைப்பு மீது இந்தியா துல்லியமான தாக்குதலை நடத்தியது. இந்த நடவடிக்கையின் போது எந்த பொதுமக்களும் குறிவைக்கப்படவில்லை. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணமே தாக்குதல் திட்டமிடப்பட்டு செய்து முடிக்கப்பட்டுள்ளது என்றார்.

தாக்குதல் வீடியோ:

 

இதற்கிடையில், ஊடகங்களுக்கு உரையாற்றும் போது, ​​கர்னல் சோபியா குரேஷி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முந்த்ரிக் மற்றும் பிற பயங்கரவாத முகாம்கள் மீதான பல தாக்குதல்களைக் காட்டும் வீடியோக்களையும் காண்பித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய, ​​விங் கமாண்டர் வியோமிகா சிங் “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி வழங்க இந்திய ஆயுதப் படைகளால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, ​​9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டன,” என்றார்.