அரசின் Emergency Alerts .. ஸ்மார்ட்போனில் பெற என்ன செய்ய வேண்டும்?
How to get emergency notification from government | போர் உள்ளிட்ட அவசர காலங்களில் அரசு பொதுமக்களுக்கு மொபைல் போன்கள் மூலம் எச்சரிக்கை அனுப்பும். இது எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் சிக்கல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவி செய்யும். இந்த நிலையில், அரசின் எச்சரிக்கையை பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையே போர் ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தாலும் கூட இன்று ( மே 11, 2025) அமிர்தசரஸில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சில சிக்கல்கள் நீடித்து வரும் நிலையில், திடீரென ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டால் அல்லது தாக்குதல் நடைபெற்றால் அது தொடர்பான தகவல்களை அரசிடம் இருந்து எப்படி பெறுவது என்பது குறித்து பார்க்கலாம்.
முடிவுக்கு வந்த இந்தியா – பாகிஸ்தான் போர்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஏப்ரல் 22, 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது இந்தியாவை கடும் கோபத்திற்கு உள்ளாக்கிய நிலையில், இந்திய அரசு பாகிஸ்தான் மீது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. ஆபரேஷன் சிந்தூரை தொடங்கி பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தி வந்த நிலையில், பாகிஸ்தானும் பதில் தாக்குதல்களை நடத்தியது. இந்த நிலையில், இரு நாடுகளும் நேற்று ( மே 10, 2025) போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதித்தன.
ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒரு சில மணி நேரங்கள் கழித்து பாகிஸ்தான் இந்தியா மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதனை இந்தியா கடுமையாக கண்டித்த நிலையில், நேற்று இரவு 10.30 மணியில் இருந்து எந்தவித தாக்குதல்களையும் பாகிஸ்தான் தொடுக்கவில்லை. இந்த நிலையில் இன்று ( மே 11, 2025) எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்த இந்திய விமானப்படை ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே மீண்டும் ஏதேனும் சிக்கல் எழலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
அரசின் எச்சரிக்கையை ஸ்மார்ட்போனில் பெறுவது எப்படி?
திடீர் போர் சூழல் அல்லது தாக்குதல்களின் போது அரசு அபாய ஒலியை எழுப்புவது மட்டுமன்றி, பொதுமக்களுக்கு மொபைல் போன்கள் மூலமும் எச்சரிக்கை அனுப்பும். அந்த எச்சரிக்கையை பெற கீழ் கண்ட நடைமுறையை பின்பற்றுங்கள்.
- ஸ்மார்ட்போனில் முதலில் Setting-க்கு செல்ல வேண்டும்.
- அதில் உள்ள Safety and Emergency என்பதை கிளிக் செய்து, Emergency Alerts என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் Wireless Emergency Alerts என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் இருக்கும் எல்லா ஆப்ஷன்களையும் தேர்வு செய்ய வேண்டும்.
மேற்கண்ட இந்த நடைமுறைகளை பின்பற்றி Notification-ஐ ஆக்டிவேட் செய்வதன் மூலம் மிக சுலபமாக அரசிடம் இருந்து எச்சரிக்கை தகவல்களை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.