கேரளா பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 6 பேர் பலி.. உயிருக்கு போராடும் 8 பேர்?
Huge Explosion In Fireworks Manufacturing Unit Near Thrissur In Kerala | கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், குறைந்தது 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பட்டாசு ஆலை வெடி விபத்து
திருச்சூர், ஏப்ரல் 21 : கேரள (Kerala) மாநிலம், திருச்சூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 6 பேர் பலியாகியுள்ள நிலையில், குறைந்தது 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முண்டத்திக்கோட்டில் உள்ள பட்டாசு ஆலையில், பூரத்திற்காக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுக்கொண்டு இருந்த நிலையில், இந்த பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருச்சூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து
முண்டத்திக்கோட்டில் உள்ள பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது சரியாக பிற்பகல் 3.30 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 18 பேர் திருச்சூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை உயரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பஹல்காமில் பாதுகாப்பை உறுதிப்படுத்த QR கோடு உடன் அடையாள அட்டை.. முக்கிய நடவடிக்கை!
5 கூடாரங்களில் பட்டாசு தயாரிப்பு – மலமலவென பரவிய தீ
திருச்சூரில் நடைபெற உள்ள பூரம் பண்டிகைக்காக அந்த பட்டாசு ஆலையில் சிறப்பாக 5 கூடாரங்கள் அமைத்து பட்டாசு தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்போது ஒரு கூடாரத்தில் தீப்பற்றிய நிலையில், அது மலமலவென அடுத்த அடுத்த கூடாரங்களுக்கு பரவியுள்ளது. இதன் காரணமாக பட்டாசுகள் வெடிக்க தொடங்கிய நிலையில், பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பஹல்காம் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு – சுற்றுலா பயணிகளின் வருகை எப்படி இருக்கிறது?
பட்டாசு ஆலை முழுவதும் புகை சூழ்ந்துள்ளதால மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் பட்டாசு ஆலை முழுவதும் உடல் பாகங்கள் சிதரி கிடக்கும் நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்த விபத்தில் மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.