AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாளை கூடுகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: இன்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டம்!!

அனைத்துக்கட்சி கூட்டத்தில், “குளிர்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற்றால் மக்கள் பயன் பெறுவர் என்றும், எதிர்க்கட்சிகள் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்,” என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களில் ஆவேசமாக இருக்கும் நிலையில், இந்த குளிர்கால கூட்டத்தொடர் “சூடான அரசியல் மோதலுக்கான மேடையாக” மாறும் என அரசியல் விமர்சகள் கூறுகின்றனர்.

நாளை கூடுகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: இன்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டம்!!
நாடாளுமன்றம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 30 Nov 2025 17:39 PM IST

டெல்லி, நவம்பர் 30: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை (டிச.1) தொடங்க உள்ளது. வரும் டிச.19ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில், விடுமுறை நாட்கள் நீங்கலாக 15 அமா்வுகள் இடம்பெற உள்ளன. முன்னதாக, கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெற்ற மழைக்கால கூட்டத் தொடரில், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆபரேஷன் சிந்தூர், பகல்காம் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களுக்கான விவாதம் எதிர்க்கட்சிகளின் அமளியால் பாதிக்கப்பட்டது. அதோடு, அந்தக் கூட்டத் தொடரில் மக்களவையின் செயல்பாடு 31 சதவீதமாகவும், மாநிலங்களவையின் செயல்பாடு 39 சதவீதமாகவும் இருந்தது.  குறிப்பாக முந்தைய கூட்டத்தொடரில், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா கிளப்பியிருந்த புயலுக்கு பின், குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிக்கு வந்துள்ள நிலையில், நடக்கவுள்ள முதல் கூட்டத்தொடர் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவர் மாநிலங்களவைத் தலைவராக முதல் முறையாக முழுமையான கூட்டத்தொடரை வழிநடத்தப்போகிறார்.

இதையும் படிக்க: விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு

எதிர்க்கட்சிகளின் போர்க்குரல்:

இதனிடையே, கூட்டத்தொடருக்கு முன்பே, எதிர்க்கட்சிகள் பல முக்கிய விஷயங்களை அவையில் விவாதிக்கத் தயாராக உள்ளனர். அதில், முக்கியம்சமாக, டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பத்தை பற்றி விரிவான விவாதம் கோர உள்ளனர். தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள், 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி வழங்காததது, உணவுத் தானிய நெல் ஈரப்பத அளவை 22% ஆக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவையில் விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

14 மசோதாக்கள் தாக்கல் செய்ய திட்டம்:

இந்த குளிர்கால கூட்டத் தொடரில் சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, இந்திய உயர்கல்வி ஆணையம் அமைப்பது, பெருநிறுவன சட்டம் மற்றும் பங்குச் சந்தை உள்ளிட்ட 14 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 10 மசோதாக்களில் 4 நிதித்துறை தொடர்புடையவை, 2 சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்புடையவை, 2 சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்புடையவை. கல்வி, எரிசக்தி, போக்குவரத்து துறை, உள்துறை ஆகியவற்றைச் சேர்ந்த தலா ஒரு மசோதாவும் அடங்கும்.

அனைத்துக்கட்சிக் கூட்டம்:

இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மொத்தம் 18 தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில், திமுக சார்பில் திருச்சி சிவா, டி.ஆர்.பாலு பங்கேற்றன்ர். கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தவும், ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன் வைத்து ஒத்துழைப்பு தருமாறு எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.

இதையும் படிங்க : 9 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்.. சிறுமி விபரீத முடிவு!

கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, டெல்லியில் திமுக எம்.பி டி.ஆர். பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது, எந்த பிரச்னைகள் குறித்து கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுத்துரைத்தோம். நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதம் ஆக உயர்த்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி குரல் எழுப்புவோம், எஸ்ஐஆருக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்றும் அவர் கூறினார்.

Follow Us