Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளுக்கு தெரிவிக்க தயாராகும் எம்.பி.க்கள் குழு.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

India's 40 MPs to Expose Pakistan's Terror Links | பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை ஆதரித்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பது குறித்தும் அதன் தீவிரத்தை குறித்தும் உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க 40 எம்பிக்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளுக்கு தெரிவிக்க தயாராகும் எம்.பி.க்கள் குழு.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 17 May 2025 11:10 AM

சென்னை, மே 17 : பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்கள் குறித்து எடுத்துரைக்க வெளிநாடுகளுக்கு எம்.பிக்கள் (MP – Member of Parliament) குழுவை அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 40 எம்பிக்கள் அடங்கிய இந்த குழு 2025 மே 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் புறப்படும் என கூறப்படுகிறது. பாகிஸ்தானுக்கு துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதன் அபாயத்தை உலக நாடுகளுக்கு எடுத்துறைக்கும் வகையில் அரசு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளுக்கு எடுத்துறைக்க போகும் இந்த எம்பிக்கள் குழுக்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர்ந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான்

ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் இந்தியாவை கடும் கோபத்திற்கு ஆளாக்கிய நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூரை (Operation Sindoor) கையில் எடுத்தது. அதன்படி, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்தது.

இதன் காரணமாக பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்த தொடங்கிய நிலையில் அது இரு நாடுகளுக்கும் இடையே மோதலை உருவாக்கியது. இதன் காரணமாக நான்கு நாட்கள் வரை இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தன. இந்த நிலையில் மே 10, 2025 அன்று இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் (Ceasefire) அமலுக்கு வந்தது. இருப்பினும் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி மற்றும் அஜர்பைஜான் உன்கிட்ட நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளுக்கு தெரிய படுத்தும் இந்திய அரசு

இந்த நிலையில், பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானின் கோர முகத்தை உலகிற்கு எடுத்துறைக்க எம்.பிக்கள் குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 40 எம்பிக்கள் இந்த திட்டத்தில் பங்கேற்க உள்ள நிலையில், அவர்கள் ஏழு குழுக்களாக பிரிந்து உலக நாடுகளுக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவைன் வெளிச்சம் போட்டு காட்ட உள்ளனர். இந்த ஒவ்வொரு குழுவிலும் 7 முதல் 8 எம்பிக்கள் இருப்பவர். இவர்கள் 10 நாட்களில் 4 முதல் 5 நாடுகளுக்கு சென்று பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு குறித்து எடுத்துரைக்க உள்ளனர். இந்த குழு 2025 மே 22, 23 ஆகிய தேதிகளில் தங்களது பயணத்தை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோடையில் நலம் தரும் நெல்லிக்காய்.. இதனுடன் சாப்பிட்டால் நல்லது..!
கோடையில் நலம் தரும் நெல்லிக்காய்.. இதனுடன் சாப்பிட்டால் நல்லது..!...
செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2-ல் இந்த மலையாள நடிகையா?
செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2-ல் இந்த மலையாள நடிகையா?...
பூஜா ஹெக்டேவின் அர்ப்பணிப்புதான் பேசுகிறது- கார்த்திக் சுப்பராஜ்!
பூஜா ஹெக்டேவின் அர்ப்பணிப்புதான் பேசுகிறது- கார்த்திக் சுப்பராஜ்!...
பொண்ணு பாத்தாச்சு.. இன்னும் 4 மாதங்களில் திருமணம்- விஷால்!
பொண்ணு பாத்தாச்சு.. இன்னும் 4 மாதங்களில் திருமணம்- விஷால்!...
பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு... ரயில் சேவைகளில் பெரிய மாற்றம்..!
பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு... ரயில் சேவைகளில் பெரிய மாற்றம்..!...
SIP : மாதம் 2,000 முதலீட்டில் கோடீஸ்வரர் ஆகலாம்! எப்படி தெரியுமா?
SIP : மாதம் 2,000 முதலீட்டில் கோடீஸ்வரர் ஆகலாம்! எப்படி தெரியுமா?...
IPL 2025 பைனலை இங்கே வையுங்க..! போராட்டத்தில் குதித்த ரசிகர்கள்!
IPL 2025 பைனலை இங்கே வையுங்க..! போராட்டத்தில் குதித்த ரசிகர்கள்!...
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை எச்சரிக்கை!...
கூகுள் மேப்பில் உள்ள நிறங்களின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
கூகுள் மேப்பில் உள்ள நிறங்களின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?...
பணியில் இருந்து விலகிய பிறகு பிஎஃப் பணத்தை எடுக்கலாமா?
பணியில் இருந்து விலகிய பிறகு பிஎஃப் பணத்தை எடுக்கலாமா?...
துப்பாக்கிச்சத்தம் அல்ல..! கிரிக்கெட் பேட் சத்தம்.. நடந்தது என்ன?
துப்பாக்கிச்சத்தம் அல்ல..! கிரிக்கெட் பேட் சத்தம்.. நடந்தது என்ன?...