போர்களமாக மாறிய கல்லூரி.. முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்து கொடுமை.. 22 பேர் மீது வழக்குப்பதிவு..

Ragging shocker: இதுகுறித்து போலீசார் கூறும்போது, பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் மைனர் என்பது தெரியவந்துள்ளது. அதோடு, கல்லூரி ஊழியர்கள் சிலரையும் சீனியர் மாணவர்கள் தாக்கியுள்ளனர். இதன் பேரில் அவர்கள் 22 பேர் மீதும் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

போர்களமாக மாறிய கல்லூரி.. முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்து கொடுமை.. 22 பேர் மீது வழக்குப்பதிவு..

ராகிங் செய்து கொடுமை

Updated On: 

24 Jan 2026 13:54 PM

 IST

கர்நாடகா, ஜனவரி 24: பெங்களூருவில் முதலாம் ஆண்டு மாணவர்களை மதுபானம் மற்றும் சிகரெட் வாங்கும்படி கட்டாயப்படுத்தி, அவர்களை ராகிங் செய்து தாக்கியதாகக் கூறி, 22 மூத்த மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் ஆகாஷ் கல்வி நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் கடந்த 15ஆம் தேதி, சில சீனியர் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை மதுபானம், சிகரெட் மற்றும் குளிர்பானங்கள் வாங்கி வரும்படி கட்டாயப்படுத்தியதுடன், புத்தகங்களையும் சுமக்க வைத்து ராகிங் செய்துள்ளனர்.

இதையும் படிக்க: “காலாவதி மருந்து கொடுத்ததாக அவதூறு வீடியோ”.. மருத்துவர் எடுத்த விபரீத முடிவு!!

கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் புகார்:

பாதிக்கப்பட்ட மாணவர்கள் இந்தச் சம்பவம் குறித்து கல்லூரியின் சேர்க்கைப் பிரிவுத் தலைவர் மிதுன் மாதவனிடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, அவர் ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து, இதுபோன்ற செயல்களை மீண்டும் செய்தால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என்று எச்சரித்தார். இதனால், ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களையும், தங்களை கண்டித்த கல்லூரி ஊழியரையும் தாக்க திட்டமிட்டனர்.

டீக்கடையில் நடந்த மோதல்:

இதையொட்டி, கல்லூரிக்கு வெளியே இருக்கும் டீக்கடைக்கு கல்லூரி சேர்க்கை பிரிவுத் தலைவர் மிதுன் மாதவன் உட்பட முதலாமாண்டு மாணவர்களை பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைத்துள்ளனர். அவர்களும் இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களது பேச்சுவார்த்தை வாக்குவாதமாகியுள்ளது.

கல்லூரி ஊழியர் உட்பட மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்:

அப்போது, முதலாமாண்டு மாணவர்களையும், கல்லூரி சேர்க்கை பிரிவுத் தலைவர் மாதவனையும் சீனியர் மாணவர்கள் இரும்புக் கம்பிகள், மரக்கட்டைகள் மற்றும் கற்களை வீசித் தாக்கினர். அவர்களுடன் கல்லூரியை சாராத மற்றொரு இளைஞரும் சேர்ந்து கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் மாணவர்களும், மிதுன் மாதவனும் பலத்த காயமடைந்தனர்.  அதோடு, இந்த தாக்குதலின் போது, முதலாமாண்டு மாணவர் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் அவர்கள் பறித்துள்ளனர்.

இதையும் படிங்கலிவ் இன் பார்ட்னரை கொலை செய்து இரும்பு பெட்டியில் வைத்து எரித்த நபர்.. உ.பியில் பகீர் சம்பவம்!

22 சீனியர் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு:

இதையடுத்து, நடந்தச் சம்பவம் குறித்து மிதுன் மாதவன் தேவனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், காவல்துறை 22 மூத்த மாணவர்கள் மற்றும் நவீன் மீது வழக்கு பதிவு செய்தது. மேலும், மூன்று மாணவர்களையும் கைது செய்தது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் மைனர் என்பது தெரியவந்துள்ளது. அதோடு, கல்லூரி ஊழியர்கள் சிலரையும் சீனியர் மாணவர்கள் தாக்கியுள்ளனர். இதன் பேரில் அவர்கள் 22 பேர் மீதும் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..