திரிபுரா, அசாம் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்!
Earthquake In Tripura and Assam | திரிபுரா மற்றும் அசாம் பகுதிகளில் இன்று (ஜனவரி 05, 2026) அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். அதிகாலையில் கட்டடங்கள் குலுங்கியதால் அவர்கள் வீடுகளை விட்டு சாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.

மாதிரி புகைப்படம்
ஷில்லாங்க், ஜனவரி 05 : திரிபுரா மற்றும் அசாம் பகுதிகளில் இன்று (ஜனவரி 05, 2026) அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இன்று அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து இந்த நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திரிபுராவை விடவும் அசாமில் சற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
திரிபுரா நிலநடுக்கம்
திரிபுராவின் கோமதி பகுதியில் இன்று அதிகாலை சரியாக 3.33 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 54 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த் நிலநடுக்கம், 23.67 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 91.50 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் முதலில் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது.
இதையும் படிங்க : இனி KYV கட்டாயமில்லை.. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முக்கிய அறிவிப்பு
3.9 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்
EQ of M: 3.9, On: 05/01/2026 03:33:32 IST, Lat: 23.67 N, Long: 91.50 E, Depth: 54 Km, Location: Gomati, Tripura.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/WC065cTcgC— National Center for Seismology (@NCS_Earthquake) January 4, 2026
அசாம் நிலநடுக்கம்
அசாமில் உள்ள மோரிகான் பகுதியில் இன்று காலை 4.17 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5.1 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்
EQ of M: 5.1, On: 05/01/2026 04:17:40 IST, Lat: 26.37 N, Long: 92.29 E, Depth: 50 Km, Location: Morigaon, Assam.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/6HvwbZHFTZ— National Center for Seismology (@NCS_Earthquake) January 4, 2026
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் சற்று கடினமானதாக இருந்த நிலையில், வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்க தொடங்கியுள்ளன. இதனால் அலறி அடித்துக்கொண்டு பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.