உத்தரகாண்டில் திடீர் மேக வெடிப்பு.. பேரலையாக பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்.. முற்றிலும் சேதம்!

Dehradun Cloudburst Cause Several Damages | உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 15, 2025) ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக அங்கு மிக கடுமையான சேதங்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

உத்தரகாண்டில் திடீர் மேக வெடிப்பு.. பேரலையாக பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்.. முற்றிலும் சேதம்!

உத்தரகாண்ட் மேக வெடிப்பு

Updated On: 

16 Sep 2025 12:19 PM

 IST

டேராடூன், செப்டம்பர் 16 : உத்தரகாண்டில் (Uttarakhand) ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பு காரணமாக அங்கு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேகவெடிப்பு காரணமாக கரைபுரண்டு ஓடிய மழை வெள்ள நீர் காரணமாக அங்கு குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது. இதன் காரணமாக அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் உத்தரகாண்ட், இயற்கை பேரழிவால் பொலிவிழந்து காணப்படுகிறது. இந்த நிலையில், உத்தரகாண்டின் தற்போதைய நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உத்தரகாண்டில் மேக வெடிப்பு – பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழையின் போது அங்கு ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக டேராடூன் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதேபோல தபோவன் பகுதியில் உள்ள குடியிருப்புகள் முற்றிலும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. பெரும்பாலான பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று (செப்டம்பர் 15, 2025) இரவு சகஸ்திரதாரா ஆற்றில் ஏற்பட்ட தீடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த பகுதியே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதையும் படிங்க : பயங்கர நிலநடுக்கம்.. பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த செவிலியர்கள்.. குவியும் பாராட்டு!

முற்றிலும் சேதத்தை ஏற்படுத்திய மேக வெடிப்பு

சகஸ்திரதாரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கட்டடங்கள், குடியிருப்புகள் முற்றிலும் இடிந்து சேதமாகியுள்ளன.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்

மழை வெள்ளம், மேக வெடிப்பு ஆகிய காரணங்களால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.