ஜபல்பூர் விபத்து.. தாய் – மகன் பலி தொடர்பாக வைரலாகும் புகைப்படம் உண்மை அல்ல.. ஆட்சியர் விளக்கம்!

District Collector Claims The Image Is Fake | ஜபல்பூர் படகு விபத்தில் தாய் - மகன் கட்டி அணைத்தபடி உயிரிழந்தது தொடர்பாக புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அது செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் உருவாக்கப்பட்டது என்றுன் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

ஜபல்பூர் விபத்து.. தாய் - மகன் பலி தொடர்பாக வைரலாகும் புகைப்படம் உண்மை அல்ல.. ஆட்சியர் விளக்கம்!

வைரலாகும் புகைப்படம்

Updated On: 

03 May 2026 00:16 AM

 IST

ஜபல்பூர், மே 02 : மத்திய பிரதேச (MP – Madhya Pradesh) மாநிலத்தின், ஜபல்பூர் (Jabalpur) படகு விபத்தில் தாய், மகன் கட்டி அணைத்தபடி இறந்துப்போன விவகாரம் தொடர்பாக ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அது உண்மை இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஜபல்பூர் படகு விபத்தில் சிக்கி 9 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த தாய் – மகன் புகைப்படம் தான் இணையத்தில் பேசுபொருளாக இருந்தது. இந்த நிலையில், அது குறித்து தான் தற்போது மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

9 பேரை பலிவாங்கிய ஜபல்பூர் படகு விபத்து

மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் நகரில் உள்ள நர்மதா ஆற்றின் மீது பார்கி என்ற அணை கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், படகு சவாரி செய்வதற்காக சுமார் 40 பேர் வரையிலான சுற்றுலாவாசிகள் ஏப்ரல் 30, 2026 அன்று அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் அந்த மாநில அரசால் இயக்கப்பட்ட படகில் பயணம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க : மத்திய அரசுப் பணிகளுக்கான பொன்னான வாய்ப்பு: விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்களே அவகாசம்!

படகு அணையில் பயணித்துக்கொண்டு இருந்துள்ளது. அப்போது பலத்த காற்று வீசிய நிலையில், படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதில் படகில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரும் நீரில் மூழ்கினர். இந்த நிலையில், தண்ணீரில் தத்தளித்துக்கொண்டு இருந்த 18 பேர் நீண்ட போராட்டங்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வைரல் புகைப்படம் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம்

இந்த விபத்தில் தாய் – மகன் கட்டி அணைத்தபடி உயிரிழந்த நிலையில், அது தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையில், அந்த புகைப்படம் உண்மை அல்ல என்று ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

Follow Us
Related Stories
சந்தேகம்.. மனைவியை கடற்கரைக்கு அழைத்துச் சென்று கொன்ற கணவன்.. தவிக்கும் 4 மாத பச்சிளம் குழந்தை!
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மர்ம மரணம்.. தர்பூசணி பழம் காரணமா? பச்சையாக மாறிய உடல் உறுப்புகள்.. ஷாக் தகவல்!!
வாக்கு எண்ணிக்கையில் மத்திய அரசு ஊழியர்கள்.. உச்சநீதிமன்றத்தை அணுகிய மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு!!
ம.பியில் அணைக்கட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் பரிதாபம்.. தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு..
மத்திய அரசுப் பணிகளுக்கான பொன்னான வாய்ப்பு: விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்களே அவகாசம்!
என்ன பார்த்தா சிரிக்கிற.. கடை உரிமையாளர்களை கத்தியால் சரமாரியாக தாக்கிய நபர்.. ஷாக் சம்பவம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..