மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை.. இணைய வசதி துண்டிப்பு!
Clash Erupted In Manipur | மணிப்பூரில் கடந்த ஒரு ஆண்டு காலமாக வன்முறை நீடித்து வருகிறது. இந்த நிலையில், அங்கு நேற்று (பிப்ரவரி 10, 2026) முதல் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. வீடுகள் தீ வைத்து கொலுத்தப்பட்ட நிலையில், அங்கு இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.
இம்பால், பிப்ரவரி 11 : மணிப்பூரில் (Manipur) ஓராண்டாக மிக கடுமையான வன்முறை நீடித்து வந்த நிலையில், அங்கு நேற்று (பிப்ரவரி 10, 2026) மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இந்த வன்முறையில் வீடுகள், கடைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் தீ வைத்து கொலுத்தப்பட்டன. இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில், அங்கு இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம்
மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி இனத்தவர்களுக்கு இடையே பிரச்னை வெடித்தது. இதனால் ஏற்பட்ட வன்முறை காரணமாக அங்கு ஒரு ஆண்டுக்கும் மேலாக ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது. இந்த நிலையில், பிப்ரவரி 04, 2026 முதல் அங்கு மீண்டும் முதலமைச்சர் திரி கெம்சந்த் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தது. இந்த ஆட்சியில் குகி மற்றும் நாகா இனத்தை சேர்ந்த எம்.எல்.ஏக்களுக்கு துணை முதல் மந்திரி பதவி வழங்கப்பட்டது.
மணிப்பூரில் மீண்டும் முதலமைச்சர் ஆட்சி அமைந்ததை எதிர்த்து குகி இனத்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக நாகா இனத்தவரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அங்கு இந்த இரண்டு சமூகங்களுக்கும் இடையே தொடர் போராட்டம் நீடித்து வந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 10, 2026) மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.
அங்கு நேற்று போராட்டம் தீவிரமடைந்த நிலையில் வீடுகள் மற்றும் கடைகள் தீ வைத்து கொலுத்தப்பட்டன. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், பதற்றத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு, இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.