Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கொல்கத்தா மாணவி பாலியல் வன்கொடுமை.. சிசிடிவியில் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்.. என்ன நடந்தது?

Kolkata Law Student Harassment Case : கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கல்லூரியின் பாதுகாவலர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கல்லூரியின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மாணவியின் குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டன.

கொல்கத்தா மாணவி பாலியல் வன்கொடுமை.. சிசிடிவியில் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்.. என்ன நடந்தது?
கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 29 Jun 2025 10:40 AM

கொல்கத்தா, ஜூன் 29 : கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி (Kolkata Law Student Harassment) அளித்த குற்றச்சாட்டுகள் சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.  மேலும், பாதிக்கப்பட்ட மாணவி வலுக்கட்டாயமாக பாதுகாவலர் அறைக்கு அழைத்து செல்லப்பட்டதும் உறுதியானதாக தெரிவித்தனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை  (Kolkata Law Student Harassment Case) செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலக்கியுள்ளது. முதலாம் ஆண்டு படிக்கும் சட்டக் கல்லூரி மாணவியை மூன்று பேர் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, முன்னாள் மாணவர், 2 மாணவர்கள்,  பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நான்கு பேரை கைது செய்தனர். 2025 ஜூன் 25ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியின் தரைத் தளத்தில் பாதுகாவலரின் அறையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மாணவி பாதுகாவலரின் அறைக்கு அழைத்து செல்லப்பட்டு, மூன்று பேரும் பாலியல் வன்கொடுமை செய்து இரவு 10 மணி வரை துன்புறுத்தி உள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா மாணவி பாலியல் வன்கொடுமை

இதனை அவர்கள் வீடியோ எடுத்ததாகவும், இதுகுறித்து வெளியே கூறினால் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டியதாக மாணவி புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹாக்கி மட்டையால் தாக்கியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. உதவி காவல் ஆணையர் பிரதீப் கோஷல் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில், மாணவி புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தது.

அதாவது, சட்டக் கல்லூரி வளாகத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் விசாரணை குழு ஆய்வு செய்தது. அதில், மாணவி புகாரில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மை என தெரிந்தது. 2025 ஜூன் 25 ஆம் தேதி பிற்பகல் 3:30 மணி முதல் இரவு 10:50 மணி வரையிலான சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போலீசார், காவலர் அறைக்குள் மாணவி வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்டது உறுதியானது.

சிசிடிவியில் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்

இது குறித்து போலீசார் கூறுகையில், “மாணவி அளித்த புகாரில் உள்ள குற்றச்சாட்டுகள் சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. அந்த வீடியோவில் பாதுகாவலல், மாணவர்கள் இருப்பது உறுதியானது. தற்போது நாங்கள் காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம்” என்று கூறினர்.

முக்கிய குற்றவாளியின் திருமண அழைப்பை சட்டக் கல்லூரி மாணவி நிராகரித்ததால், அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையில், சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. மேலும், ஆளும் திரிணாமல் காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் கைதான மோனோஜித் மிஸ்ராவின் தந்தை பேசுகையில், “நான் வழக்கைத் தொடரவோ அல்லது சட்டப் போராட்டம் நடத்தவோ மாட்டேன். வெளிப்படையாகச் சொன்னால், என்னால் அதைச் செய்ய முடியாது. கடந்த ஐந்து-ஆறு ஆண்டுகளாக எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

அவர் மிகவும் பிஸியாக இருந்தார். நான் என் சொந்தப் பணத்தில் வாழ்கிறேன். அவர் ஒரு பெரிய வழக்கறிஞராக வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன். இப்போது என்ன நடந்தது என்று பாருங்கள். அவனுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அதற்கு என் மகன் தகுதியானவன்” எனக் கூறினார்.