மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027: முதல் கட்டத்தில் கேட்கப்படும் 33 கேள்விகள்.. என்னென்ன தெரியுமா?
Caste Census 2027: சாதி கணக்கெடுப்பு என்பது, நாட்டின் மக்கள்தொகையில் உள்ள பல்வேறு சாதிகள், சமூகப் பிரிவுகள் மற்றும் அவற்றின் சமூக-பொருளாதார நிலை குறித்து முழுமையான தரவுகளை சேகரிக்கும் ஒரு கணக்கெடுப்பு முறையாகும். இந்தியாவில் 1931 ஆம் ஆண்டு கடைசியாக முழுமையான சாதி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

கோப்பு புகைப்படம்
ஜனவரி 23, 2026: மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டம் வீட்டுப் பட்டியல் மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பு – ஏப்ரல் முதல் செப்டம்பர், 2026 வரை நடக்கும். மக்கள் எண்ணிக்கை கணக்கெடுப்பு (PE) – பிப்ரவரி 2027ல் நடக்கும். 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம், அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளிலும் 2026 ஏப்ரல் 1 முதல் 2026 செப்டம்பர் 30 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 33 கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு கேள்விப் பட்டியல்:
Notification of questionnaire of Phase I of Census of India 2027 – Houselisting & Housing Census has been issued. The questionnaire for Phase II i.e. Population Enumeration will be notified in due course.
भारत की जनगणना 2027 के प्रथम चरण – मकानसूचीकरण और मकानों की गणना हेतु… pic.twitter.com/1BHbxmA8fN
— Census India 2027 (@CensusIndia2027) January 22, 2026
-
கட்டிட எண் (நகராட்சி / உள்ளாட்சி அமைப்பு / மக்கள்தொகை கணக்கெடுப்பு எண்)
-
கணக்கெடுப்பு வீட்டு எண்
-
கணக்கெடுப்பு வீட்டின் தரையின் பிரதானப் பொருள்
-
கணக்கெடுப்பு வீட்டின் சுவரின் பிரதானப் பொருள்
-
கணக்கெடுப்பு வீட்டின் கூரையின் பிரதானப் பொருள்
-
கணக்கெடுப்பு வீட்டின் பயன்பாடு
-
கணக்கெடுப்பு வீட்டின் நிலை
-
குடும்ப எண்
-
அந்தக் குடும்பத்தில் வழக்கமாக வசிக்கும் மொத்த நபர்கள் எண்ணிக்கை
-
குடும்பத் தலைவர் பெயர்
-
குடும்பத் தலைவர் பாலினம்
-
குடும்பத் தலைவர் பட்டியலிடப்பட்ட சாதி / பட்டியலிடப்பட்ட பழங்குடி / பிற பிரிவைச் சேர்ந்தவரா
-
கணக்கெடுப்பு வீட்டின் உரிமை நிலை
-
குடும்பம் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் குடியிருப்பு அறைகளின் எண்ணிக்கை
-
குடும்பத்தில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை
-
குடிநீரின் முக்கிய ஆதாரம்
-
குடிநீர் ஆதாரம் கிடைக்கும் நிலை
-
ஒளிவிளக்கின் முக்கிய ஆதாரம்
-
கழிப்பறை வசதி உள்ளதா
-
கழிப்பறையின் வகை
-
கழிவுநீர் வெளியேற்ற முறை
-
குளியலறை வசதி உள்ளதா
-
சமையலறை மற்றும் LPG / PNG இணைப்பு உள்ளதா
-
சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள்
-
ரேடியோ / டிரான்சிஸ்டர்
-
தொலைக்காட்சி
-
இணைய வசதி
-
லேப்டாப் / கணினி
-
தொலைபேசி / கைப்பேசி / ஸ்மார்ட்போன்
-
மிதிவண்டி / ஸ்கூட்டர் / மோட்டார் சைக்கிள் / மோபெட்
-
கார் / ஜீப் / வேன்
-
குடும்பத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் முக்கிய தானியம்
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான தகவல்தொடர்புகளுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் கைப்பேசி எண்
மேலும் படிக்க: மூடப்படாத ரயில்வே கேட்… திடீரென ரயிலின் குறுக்கே வந்த லாரி – பரபரப்பு சம்பவம்
இரண்டாம் கட்டமான மக்கள் எண்ணிக்கை கணக்கெடுப்பு (Population Enumeration) தொடர்பான கேள்வித்தாள் பின்னர் அறிவிக்கப்படும்.