பீகாரில் முதல்கட்ட தேர்தல் இன்று தொடக்கம்: 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு!!

Bihar Assembly polls: பீகாரில் இன்று நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் 121 சட்டமன்ற தொகுதிகளில் 1,314 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், தேஜஸ்வி யாதவ் போட்டியிடும் தொகுதியும் அடங்கியுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் வகையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பீகாரில் முதல்கட்ட தேர்தல் இன்று தொடக்கம்: 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு!!

கோப்புப்படம்

Updated On: 

06 Nov 2025 08:02 AM

 IST

பீகார், நவம்பர் 06: பீகார் மாநிலத்தில் 121 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவானது, மாலை 6 மணிக்கு நிறைவடைய உள்ளது. இதையொட்டி, அங்கு அசம்பாவிதங்களை தடுக்க பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். தேர்தலையொட்டி, அங்கு கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இறுதி நாளில் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு 11ல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதையும் படிக்க: Rahul Gandhi: ஹரியானா தேர்தலில் பிரேசில் மாடல் பெயர் எப்படி..? தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி

பீகாரில் தற்போது நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிர களப்பணியாற்றி வருகிறது. அதேசமயம், நிதிஷ்குமாரிடம் இருந்து இந்த முறை ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதாவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸின் மகா பந்தன் கூட்டணி உள்ளது. இங்கு பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியபோதிலும், பாஜக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

18 மாவட்டங்களில் முதற்கட்ட தேர்தல்:

அந்தவகையில், பீகாரின் 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில், முதற்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடக்கிறது. இதற்காக மொத்தம், 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 36,733 வாக்குச்சாவடிகள் கிராமப்புறங்களில் உள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க : இந்த வகை வாகனங்களுக்கு அனுமதி இல்லை.. டெல்லி அரசு எடுத்த முடிவு!

1,314 வேட்பாளர்கள் போட்டி:

பீகாரின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7 கோடியே 42 லட்சம். இவர்களில் ஆண்கள் 3 கோடியே 92 லட்சம். பெண்கள் 3 கோடியே 50 லட்சம் ஆவர். மொத்தம் 90 ஆயிரத்து 712 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், இன்று நடைபெறும் தேர்தலில் 121 சட்டமன்ற தொகுதிகளில் 1,314 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதற்கட்ட தேர்தலில் வாக்களிக்கும் 3.75 கோடி பேருக்காக 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் போட்டியிடும் ராகோபூர் தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.