மது குடித்துவிட்டு, ஆபாச படங்களை பார்த்து கணவனை தொல்லை செய்த மனைவி.. பகீர் சம்பவம்!

Bengaluru Woman Tortured Husband | பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் என்ஜீனியராக வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில், தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு செல்லும் அந்த பெண் ஆபாச வீடியோக்களை பார்த்துவிட்டு தனது கணவரிடம் தனது தோழிகளுடன் அவ்வாறு இருக்க கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.

மது குடித்துவிட்டு, ஆபாச படங்களை பார்த்து கணவனை தொல்லை செய்த மனைவி.. பகீர் சம்பவம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

31 Mar 2026 06:50 AM

 IST

பெங்களூரு, மார்ச் 31 : பெங்களூருவில் (Bengaluru) தினமும் மது குடித்துவிட்டு தொல்லை கொடுத்தது மட்டுமன்றி, ஆபாச வீடியோக்களை காண்பித்து அதில் இருப்பதை போல தனது தோழிகளுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று பென் என்ஜினீயர் ஒருவர் தனது கணவரை தொல்லை செய்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தினமும் மது குடித்துவிட்டு கணவனை சித்ரவதை செய்த மனைவி

பாதிக்கப்பட்ட நபருக்கும் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றும் பெண் ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான ஆரம்பத்தில் இருவரும் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளனர். ஆனால், அதற்கு பிறகு தான் தனது மனைவிக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதை அந்த நபர் அறிந்துள்ளார்.

இதையும் படிங்க : இந்தியாவில் மருந்துகள் விலை இவ்வளவா.. அதிர்ச்சியடைந்த வெளிநாட்டு பெண்.. வீடியோ வைரல்!

தினமும் வேலைக்கு செல்லும் தனது மனைவி நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் இணைந்து கேளிக்கை விடுதிகளுக்கு சென்று மது அருந்துவிட்டு வருவது அவருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பொறுமையை இழந்த அவர் தனது மனைவியிடம் அது குறித்து கேட்டுள்ளார். அதுமட்டுமன்றி, மது பழக்கத்தை கைவிட வேண்டும் என்றும் அவரை கண்டித்துள்ளார்.

கடந்த கால வாழ்க்கை குறித்து கூறி பகீர் கிளப்பிய பெண்

மது அருந்த கூடாது என கணவர் கூறியதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண், கடந்த காலத்தில் தான் யார் யார் உடன் உல்லாசமாக இருந்தேன் என்பது குறித்து கூறியுள்ளார். இதனால், கணவன் மற்றும் மனைவி இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த நிலையில், இருவரின் பெற்றோரும் அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம்.. எரிபொருள் விநியோகம் முதல் இந்தியர்களின் பாதுகாப்பு வரை முழுமையான நடவடிக்கைகள்

சில நாட்கள் அமைதியாக இருந்த அந்த பெண் மீண்டும் மது குடித்துவிட்டு வர தொடங்கியுள்ளார். அதுமட்டுமன்றி, ஆபாச படங்களை காண்பித்து தனது கணவரை தன் தோழிகளுடன் அவ்வாறு இருக்க வேண்டும் என கூறி மனதளவிலும், உடல் அளவிலும் சித்ரவதை செய்துள்ளார். ஒருகட்டத்தில் மன வேதனை தாங்க முடியாத அந்த நபர் காவல் நிலையத்தை நாடியுள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..