1 மணி நேரம் 34 நிமிடம்… விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து பயணித்த 13 ஆப்கான் சிறுவன் – உயிர் பிழைத்தது எப்படி?

Flight Survival Shocker : ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூலில் இருந்து செப்டம்பர் 22, 2025 அன்று டெல்லி நோக்கி வந்த விமானத்தில் சக்கரப் பகுதியில் பயணித்த 13 வயது சிறுவன் அனைவர் மத்தியில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறான். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 மணி நேரம் 34 நிமிடம்... விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து பயணித்த 13 ஆப்கான் சிறுவன் - உயிர் பிழைத்தது எப்படி?

மாதிரி புகைப்படம்

Published: 

22 Sep 2025 22:29 PM

 IST

டெல்லி, செப்டம்பர் 22: விமானத்தின் (Flight) லேண்டிங் கியர் பகுதியில் ஒளிந்து கொண்டு 94 நிமிட பயணத்தை வெற்றிகரமாக உயிருடன் கடந்த 13 வயது ஆப்கானிஸ்தான் சிறுவனின் செயல் பலருக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்ட தகவலின்படி, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறுவன் முதலில் ஈரான் செல்லும் எண்ணத்தில் விமானத்தில் ஒளிந்து செல்லத் திட்டமிட்டுள்ளார். ஆனால் குழப்பத்தில் ஈரான் விமானத்துக்கு பதிலாக காபூலிலிருந்து டெல்லி நோக்கி செல்லும் கேஏஎம் ஏர் (KAM Air) நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ340 என்ற விமானத்தில் ஏறியுள்ளார்.

விமானத்தின் சக்கரப் பகுதியில் பயணித்த சிறுவன்

காபூல் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து செப்டம்பர் 22, காலை 8.46 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம், 10.20 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானம் தரையிறங்கிய பின், சிறுவன் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதியில் நடந்து கொண்டிருப்பதை பார்த்து, விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையும் படிக்க : Drinks Party-ல் தகராறு.. நிர்வாணமாக்கி அடித்து கொலை செய்யப்பட்ட நபர்.. நண்பர்கள் வெறிச்செயல்!

சிறுவன் உயிர் பிழைத்தது எப்படி?

விமான சக்கரப்பகுதியில் ஒளிந்து பயணம் செய்வது மிகுந்த ஆபத்தான ஒன்று என கூறப்படுகிறது. காரணம் விமானம் 30,000 அடி உயரத்தில் பறக்கும் போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூச்சு விடுவது கடினம். மேலும் -60 டிகிரி செல்சிய வரை வெப்ப நிலை குறைந்து தாங்க முடியாத கடும் குளிர் ஏற்படும். மேலும் விமானம் கீழிறங்கும்போது சக்கரம் மடங்கும் என்பதால் அதில் சிக்கி உயிர் பிழைப்பது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற சவாலான சூழ்நிலையை எதிர்கொண்ட சிறுவன் எப்படி உயிர் பிழைத்தான் என்பது விமான நிலைய அதிகாரிகளுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விமான நிலைய அதிகாரி கேப்டன் மோகன் ரங்கநாதன் இதுகுறித்து விளக்குகையில், சக்கரப்பகுதியின் கதவு விமானம் பறக்கும்போது மூடப்படுவது வழக்கம். அதனால் உள்ளே சிறிதளவு அழுத்தம் மற்றும் வெப்பநிலை ஆகியவை பயணிகள் இருக்கும் பகுதியின் வெப்பநிலைக்கு நிகராக இருக்கலாம். இது சிறுவனை காப்பாற்றியிருக்கலாம் என்றார்.

மருத்துவர் ஆச்சரியம்

இதுகுறித்து பிரபல மருத்துவர் ரிதின் மொஹிந்த்ரா கூறுகையில், அதிக உயரத்தில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும். மேலும் கடும் குளிர் வேறு நிலவும். இதனால் மயக்கம், இதயம் செயல்படாமல் போவது போன்ற பிர்னைகள் ஏற்படாலம். இத்தகைய சூழ்நிலையில் சிறுவன் உயிர் பிழைத்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்றார். ஏற்கனவே விமான நிலைய சக்கரப்பகுதியில் பயணித்த 5 பேரில் உருவர் மட்டுமே உயிர் பிழைக்கிறார் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : எமனாக மாறிய இன்ஸ்டா காதல்.. முந்திரி தோப்பில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன்.. பகீர் பின்னணி!

இந்தியாவில் இது இரண்டாவது சம்பவம்

இந்தியாவில் விமான சக்கரத்தில் பயணிப்பது இது இரண்டாவது சம்பவம் என கூறப்படுகிறது. கடந்த 1996 ஆம் ஆண்டு டெல்லியில் இருந்து இரண்டு சகோதரர்கள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லண்டன் செல்ல முயன்றனர். அதில் ஒருவர் உயிர் பிழைத்தார். மற்றொரு சகோதரர் எதிர்பாராதவிதமாக உயிர் இழந்தார். இதுபோன்ற சம்பவங்கள் விமான நிலையத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து கேள்விகளை எழுப்புகின்றன.